பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நாளை இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துகிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Posted On: 04 MAY 2025 5:11PM by PIB Chennai

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், நாளை (2025 மே 05) புதுதில்லியில் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு நகதானியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். தற்போதைய பிராந்திய, சர்வதேச பாதுகாப்பு நிலைமை குறித்து இரு அமைச்சர்களும் தங்களது கருத்துகளையும் யோசனைகளையும் பரிமாறிக்கொள்வார்கள். மேலும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி அவர்கள் விவாதிப்பார்கள்.

இந்தியாவும் ஜப்பானும் நீண்டகால நட்பைக் கொண்டுள்ளன. 2014-ம் ஆண்டுக்குப் பின் இந்த ஒத்துழைப்பு, சிறப்பு உத்திசார் ஒத்துழைப்பாக வலுவடைந்துள்ளது.   பாதுகாப்புத் துறையானது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு முக்கிய தூணாகும்.

உத்திசார் விஷயங்களில் வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பு காரணமாக இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான பாதுகாப்புப் பரிமாற்றங்கள் சமீபத்திய ஆண்டுகளில் வலுப்பெற்றுள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகிய அம்சங்கள் குறித்த பொதுவான கண்ணோட்டத்தின் மூலம் இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்து வருகிறது.

நவம்பர் 2024-ல் லாவோஸ் நாட்டில் நடைபெற்ற ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின்போது நடைபெற்ற சந்திப்பிற்குப் பின்னர் ஆறு மாதங்களில், இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் இரண்டாவது முறையாக புதுதில்லியில் நாளை (2025 மே 05) சந்திக்கவுள்ளனர்.

****

(Release ID: 2126778)

SM/PLM/RJ


(Release ID: 2126807) Visitor Counter : 23
Read this release in: English , Urdu , Hindi , Marathi