ஆயுஷ்
சர்வதேச யோகா தினம் 2025 க்கு இன்னும் 50 நாட்கள்: "யோகா பெருவிழாவைக்" கொண்டாட நாசிக் தயாராகிறது
Posted On:
01 MAY 2025 6:38PM by PIB Chennai
ஆன்மீகப் பாரம்பரியம் மற்றும் மகாகும்பமேளாவின் தளமாக புகழ்பெற்ற புனித நகரமான நாசிக், 11 வது சர்வதேச யோகா தினத்திற்கான 50 நாள் கவுண்டவுனைக் குறிக்கும் வகையில் மே 2 ஆம் தேதி யோகா பெருவிழா 2025 என்ற பிரமாண்டமான நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் மற்றும் பல பிரமுகர்கள், யோகா பயிற்சியாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு குடிமக்கள் முன்னிலையில், 2025 மே 2 ஆம் தேதி காலை 6:30 மணி முதல் காலை 8:00 மணி வரை பொது யோகா நெறிமுறையின் வெகுஜன செயல்விளக்கத்துடன் பெருவிழா தொடங்கும். மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், நாசிக் குடிமக்களை இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125866
***
RB/DL
(Release ID: 2125946)