பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் துறை அமைச்சருடன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் தொலைபேசியில் பேச்சு; பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்தார்
प्रविष्टि तिथि:
01 MAY 2025 6:06PM by PIB Chennai
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு பீட் ஹெக்சேத், இன்று (மே 01, 2025) பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்குடன் தொலைபேசியில் பேசினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததற்கு தனது அனுதாபங்களையும் இரங்கலையும் அவர் தெரிவித்தார். உரையாடலின் போது, பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஆதரித்து, பயிற்சி அளித்து, நிதியளித்து வந்துள்ளது என்று திரு ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரிடம் கூறினார்.
“பாகிஸ்தான் ஒரு தீவிரவாத ஆதரவு நாடு என்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும், கொடூரமான பயங்கரவாதச் செயல்களை வெளிப்படையாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டித்து, குரல் கொடுப்பது முக்கியம்” என்றும் அவர் மேலும் கூறினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அமெரிக்க அரசின் முழு ஆதரவை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.
***
(Release ID: 2125837)
SM/PLM/SG/RJ/DL
(रिलीज़ आईडी: 2125945)
आगंतुक पटल : 33