நிதி அமைச்சகம்
நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை செயலாளராக திரு. அரவிந்த் ஸ்ரீவஸ்தவா இன்று பொறுப்பேற்றார்
Posted On:
01 MAY 2025 1:46PM by PIB Chennai
திரு. அரவிந்த் ஸ்ரீவஸ்தவா இன்று நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமைச்சரவையின் நியமனக் குழு ஏப்ரல் 18 அன்று ஸ்ரீவஸ்தவாவை வருவாய்த் துறையின் செயலாளராக நியமித்தது.
முன்னதாக, கர்நாடக பிரிவின் 1994 தொகுதி இந்திய ஆட்சிப் பணி(ஐ.ஏ.எஸ்) அதிகாரியான ஸ்ரீவஸ்தவா, பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராகவும், பின்னர் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றினார்.
அதற்கு முன்பு, ஸ்ரீவஸ்தவா நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பட்ஜெட் பிரிவில் இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்; ஆசிய வளர்ச்சி வங்கியின் அபிவிருத்தி அதிகாரி; செயலாளர், நிதித்துறை, பெங்களூரு; செயலாளர், நகர்ப்புற வளர்ச்சித் துறை, பெங்களூரு; கர்நாடகாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஆகிய பொறுப்புகளை அவர்வகித்துள்ளார்.
***
(Release ID: 2125726)
TS/PKV/RJ
(Release ID: 2125752)
Visitor Counter : 26