தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கருணை அடிப்படையிலான ஆளுகை குறித்து நோபல் பரிசு பெற்ற திரு கைலாஷ் சத்யார்த்தி சிறப்புரையாற்றினார்
Posted On:
01 MAY 2025 12:09PM by PIB Chennai
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (ஈபிஎப்ஓ) முதன்மையான பயிற்சி அகாடமியான சமூக பாதுகாப்புக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய அகாடமி ஏற்பாடு செய்திருந்த ஆளுகையை மீள் சீரமைத்தல்: தகைசால் சிறப்பு சொற்பொழிவு (ஆர்ஜிடிஇ) தொடரில் நோபல் பரிசு பெற்ற திரு கைலாஷ் சத்யார்த்தி உரையாற்றினார். இந்த அமர்வில் நாடு முழுவதிலுமிருந்து ஈபிஎஃப்ஓ அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மெய்நிகர் முறையில் கலந்து கொண்டனர்.
தகைசால் சிறப்பு சொற்பொழிவு முன்முயற்சியானது 2023 ஆம் ஆண்டில் "நல்லாட்சி தினம்- டிசம்பர் 25 -ந்தேதி அன்று உருவானது. மேலும் பொது நிர்வாகத்தில் மேம்பட்ட நம்பிக்கை மற்றும் உண்மையான சிறப்பைத் தூண்டும் நுண்ணறிவு விவாதங்களுக்கான தளங்களில் ஒன்றாக மலர்ந்துள்ளது. இந்த சொற்பொழிவு ஆர்.ஜி.டி.இ தொடரின் பதினேழாவது சொற்பொழிவாகும்.
ஜெய்ப்பூரில் உள்ள பால ஆசிரமத்திலிருந்து பேசிய திரு. சத்யார்த்தி, பொது நிர்வாகத்தில் கருணை நிறைந்த ஆட்சியின் முக்கிய பங்கை வலியுறுத்தினார். பொறுப்பான மற்றும் பயனுள்ள நிறுவனங்களை உருவாக்குவதற்கு கருணை, ஆழ்ந்த செவிமடுத்தல் மற்றும் தார்மீக பொறுப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய நிர்வாகம் அவசியம் என்று கூறினார். நவீன சமுதாயம் அதன் தார்மீக நெறியை இழந்து வருவதாகக் கவலை தெரிவித்த அவர், நிர்வாக அமைப்பில் நன்றியுணர்வு மற்றும் மனித இணைப்பைப் புதுப்பிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
ஜெய்ப்பூர் அரங்கில், கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் திரு அஜீத் குமார் ( ராஜஸ்தான்) திரு சத்யார்த்தியைக் கௌரவித்தார். மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் திரு ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அகாடமியின் இயக்குனர் திரு குமார் ரோஹித் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய பி.எஃப்.ஓ ஆணையர், அனைத்து ஈ.பி.எஃப்.ஓ அதிகாரிகளையும் கருணையின் அடிப்படையில் ஒரு முடிவையாவது தங்கள் பணியில் செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
***
(Release ID: 2125692)
TS/PKV/RJ
(Release ID: 2125704)
Visitor Counter : 19