ஜல்சக்தி அமைச்சகம்
மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் ஜலஜ் முன்முயற்சியை ஆய்வு செய்து நதிகள் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உருவாக்கத்திற்கான புதிய வழிமுறையை வகுத்தார்
Posted On:
30 APR 2025 3:50PM by PIB Chennai
இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்ட திட்டமான ஜலஜின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் தலைமை தாங்கினார். தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் ஜலஜ் திட்டமானது அரசின் கங்கா தொலைநோக்கு பார்வையின் ஒரு குறிப்பிடத்தக்க அங்கமாக உள்ளது. நிலையான பொருளாதார நடவடிக்கைகள் மூலம் மக்களை நதிகளுடன் இணைப்பது, வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்டு, நீர்வாழ் உயிரின உயிர்ப்பன்மை பாதுகாப்பு குறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியன இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
ஜலஜ் முயற்சி நதிக்கும் சமூகங்களுக்கும் இடையில் இணக்கமான பிணைப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் பாதுகாக்கப்பட்ட கங்கை நதியின் மதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுகிறது என்பது மதிப்பாய்வில் தெரிய வந்துள்ளது. யூடியூப் சேனல் உட்பட மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் ஜலஜ் 263 பயிற்சி திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
ஜலஜ் திட்டத்தின் வாழ்வாதாரத் திறனை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஆய்வு செய்த திரு சி.ஆர்.பாட்டீல், நதிகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் சமூகங்களை இணைக்கும் பாலமாக விளங்கும் அதன் பங்கை வலியுறுத்தினார். ஜலஜ் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புதுமையான மாதிரிகளைப் பாராட்டிய அவர், கோதாவரி, பெரியார், பம்பா மற்றும் பாரக் போன்ற பிற முக்கிய நதி ஆற்றுப் படுகைகளில் வெற்றிகரமான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125460
****
TS/IR/SG/KR
(Release ID: 2125502)
Visitor Counter : 13