சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
நாக்பூரில் பல்வகை வாகன முறையிலான சரக்கு போக்குவரத்து பூங்காவில் வணிக நடவடிக்கைகள் தொடக்கம்
Posted On:
30 APR 2025 8:53AM by PIB Chennai
பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்ட முன்முயற்சியின் கீழ், பல்வேறு போக்குவரத்து முறைகளில் மக்கள், சரக்குகள், சேவைகள் ஆகியவற்றின் இயக்கத்திற்கு தடையற்ற, திறன் வாய்ந்த இணைப்பு வழங்குவது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை நோக்கமாகக் கொண்டு, தொலைதூரப் பகுதிகளிலும் போக்குவரத்துக்கான இணைப்பை மேம்படுத்துவதுடன் பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் வகையிலும் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரியின் வழிகாட்டுதலின் பேரில் பல்வகை வாகன முறையிலான சரக்குப் போக்குவரத்து பூங்கா, தனது வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்தப் பூங்கா நாக்பூர் வார்தா அருகே உள்ள சிண்டியில் அமைந்துள்ளது.
மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குச் சொந்தமான தேசிய நெடுஞ்சாலை லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் (NHLML) ஏப்ரல் 28-ம் தேதி ஃபரூக்நகரிலிருந்து 123 மாருதி கார்களின் முதல் சரக்குப் பெட்டக போக்குவரத்துக்கான ஆணையைப் பெற்றது.
நாக்பூரில் உள்ள இந்த நிறுவனம் 150 ஏக்கர் பரப்பளவில் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்து பூங்காவாக மூன்று கட்டங்களாக பொதுத்துறை - தனியார் பங்களிப்புடன் 45 ஆண்டு கால சலுகை காலத்துடன் ரூ.673 கோடி மதிப்பீட்டில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக ரூ.137 கோடி முதலீட்டில் இது உருவாக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125325
----
TS/SV/KPG/KR
(Release ID: 2125426)
Visitor Counter : 12