தேர்தல் ஆணையம்
தேர்தல் அதிகாரிகளுக்கு ஐஐஐடிஇஎம் நிறுவனத்தில் இரண்டு நாள் பயிற்சி அளித்து களத் தயார் நிலையை இந்திய தேர்தல் ஆணையம் வலுப்படுத்தியுள்ளது
Posted On:
30 APR 2025 12:24PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள குடியரசு மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான சர்வதேச நிறுவனத்தில் (ஐஐஐடிஇஎம்) பீகாரைச் சேர்ந்த தேர்த்ல் அதிகாரிகள், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள், ஹரியானா, தில்லி, உத்தரப்பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த தேர்தல் பதிவு அதிகாரிகள், வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் இன்று தொடங்கி வைத்தார். சட்டப்பேரவைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கான தயார் நிலையின் ஒரு பகுதியாக தேர்தல் ஆணையத்தின் இந்தப் பயிற்சித் திட்டம் அமைந்துள்ளது. இந்த தொகுதி நிலையிலான பயிற்சித் திட்டத்தில் மொத்தம் 369 தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பயிற்சித் திட்டத்தை தொடங்கிவைத்து உரையாற்றிய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் மற்றும் முகவர்கள் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை உறுதி செய்யும் பணிக்கு பொறுப்பானவர்கள் என்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, வாக்காளர் பதிவு விதிகள் 1960, அவ்வப்போது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி அவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த மாதம் நடைபெற்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சித் திட்டத்தில் பீகாரைச் சேர்ந்த 10 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 280 வாக்குச்சாவடி முகவர்களும் இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.
குறிப்பாக வாக்காளர் பதிவு, தேர்தல் தொடர்பான படிவங்களைக் கையாளுதல், தேர்தல் நடைமுறைகளின் கள அளவிலான அமலாக்கம் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் முகவர்களுக்கு பணி தொடர்பான நடைமுறைகளை புரிந்து கொண்டு அதன் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப செயல்விளக்கங்கள், வாக்குப் பதிவு எந்திரங்கள், வி.வி.பி.ஏ.டி எந்திரங்களின் செயல்பாடு குறித்த பயிற்சியும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125387
-----
TS/SV/KPG/KR
(Release ID: 2125413)
Visitor Counter : 21