பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 30 APR 2025 9:36AM by PIB Chennai

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு  இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்: PM @narendramodi”

*********

(Release ID: 2125333)

TS/SMB/KR

 


(Release ID: 2125383) Visitor Counter : 12