புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
தனியார் துறை மூலதனச் செலவுகளின் முதலீட்டு நோக்கங்கள் குறித்த முன்கணிப்பு கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகள்
(கணக்கெடுப்பு காலம்: நவம்பர் 2024 முதல் ஜனவரி 2025 வரை)
Posted On:
29 APR 2025 4:16PM by PIB Chennai
2022-23-ம் ஆண்டில், தனியார் துறையின் மூலதனச் செலவு தரவை குறித்து புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒரு விரிவான வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது. கடந்த கால முதலீடுகள் குறித்த தரவுக்காக வடிவமைக்கப்பட்ட கணக்கெடுப்பு கருவிகள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான மூலதன செலவு குறித்த முன்னோட்ட தகவலைத் தருகின்றன.திட்டமிடப்பட்ட மூலதனச் செலவுகள் மற்றும் சொத்து வகை அடிப்படையில் முதலீடுகளின் தலைப்பு வாரியான தரவுகள் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் விவரக்குறிப்புகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன.
இந்தப் பரிந்துரைக்கு ஏற்ப, தேசிய புள்ளியியல் அலுவலகம் நவம்பர் 2024 மற்றும் ஜனவரி 2025 க்கு இடையில் தனியார் துறை மூலதனச் செலவு முதலீட்டு நோக்கங்கள் குறித்த தொடக்க முன்னோட்ட கணக்கெடுப்பை நடத்தியது. கட்டமைக்கப்பட்ட மூலதனச் செலவு தரவைச் சேகரிக்க, சாட்போட் உதவியுடன் சுய-நிர்வகிக்கப்பட்ட, இணைய அடிப்படையிலான கணக்கெடுப்பு தளத்தின் மூலம் கார்ப்பரேட் துறையை ஈடுபடுத்துவதற்கான அமைச்சகத்தின் முதல் முயற்சியாக இது அமைந்தது. ஆய்வின் கண்டுபிடிப்புகளை விரிவான கையேடாக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மூலதனச் செலவு கணக்கெடுப்பின் முதன்மை நோக்கம், கடந்த மூன்று நிதியாண்டுகளில் (2021-22, 2022-23 & 2023-24) தனியார் பெருநிறுவனங்களின் மூலதனச் செலவு போக்குகளையும், நடப்பு ஆண்டு (2024-25) மற்றும் வரவிருக்கும் நிதியாண்டுகளுக்கான (2025-26) எதிர்பார்க்கப்படும் மூலதன செலவினங்களையும் மதிப்பிடுவதாகும்.
மூலதன செலவினம் தேசிய முதலீட்டிற்கு பங்களிப்பதிலும், பொருளாதாரத்திற்குள் சொத்துக்களின் கையிருப்பை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நீண்ட கால சொத்துக்களை உருவாக்க வழிவகுக்கிறது, இது பல ஆண்டுகளாக வருவாயை உருவாக்குவது மட்டுமல்லாமல் பொருளாதார நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டு செயல்திறனையும் மேம்படுத்துகிறது. உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்கு இது அடிப்படையாகும், இதன் மூலம் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. இந்த வளர்ச்சி, வேலை உருவாக்கத்தை ஆதரிக்கிறது மற்றும் தொழிலாளர் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது.
தனியார் பெருநிறுவன தொழில் துறையில் ஒரு தொழிற்சாலைக்கான நிரந்தர சொத்து மதிப்பு 2021-22 இல் ரூ.3,151.9 கோடியாக இருந்தது 2023-24இல் ரூ.4,183.3 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2125175
***
TS/PKV/AG/DL
(Release ID: 2125237)
Visitor Counter : 14