வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஜெய்ப்பூரில் மத்திய அமைச்சர் திரு. மனோகர் லால் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. பஜன் லால் சர்மா ஆய்வு
Posted On:
29 APR 2025 1:55PM by PIB Chennai
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு. மனோகர் லால் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. பஜன் லால் சர்மா ஆகியோர் ராஜஸ்தானில் செயல்படுத்தப்படும்நகர்ப்புற மேம்பாடு திட்டங்கள் தொடர்பாக ஜெய்ப்பூரில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர்.
தூய்மை இந்தியா இயக்கம், பிரதமரின் மின்னணு பேருந்து சேவை, ஜெய்ப்பூர் மெட்ரோ ரயில் திட்டம், அமிர்த நீர்நிலைகள் இயக்கம் 2.0 மற்றும் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் போன்ற மத்திய அரசின் நிதியுதவியுடன் ராஜஸ்தானில் செயல்படுத்தி வரும் முக்கியமான திட்டங்களின் வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.
மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டத் திட்டம் மற்றும் இதர முக்கியத் திட்டங்களில் செலவினம் குறித்து முறையான மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று முதலமைச்சர் திரு. சர்மா கூறினார். இதன் மூலம் நிதி ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்துவதுடன், பொது மக்களுக்கும் சிறந்த வசதிகளை வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
வரலாற்றுடன் தொடர்பு கொண்ட ராஜஸ்தான் வேகமாக வளர்ந்து வரும் மாநிலம் என்றும், அங்கு மத்திய அரசின் ஆதரவுடன் நகர்ப்புற வளர்ச்சிக்கான முக்கியமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். சாமானிய மனிதனின் எதிர்காலத் தேவைகள் மற்றும் வசதிகளை மனதில் கொண்டு திட்டமிடுதல் மற்றும் அவற்றை முறையாக செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை அவர் வழங்கினார்.
மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான் அரசின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2125110)
TS/GK/SG/KR
(Release ID: 2125144)
Visitor Counter : 14