சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
பாதுகாப்பான, ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் ஆன்மீகம் நிரம்பிய ஹஜ் பயணத்திற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
29 APR 2025 2:18PM by PIB Chennai
புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் 1,22,518 யாத்ரீகர்களுக்கும் மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முதல் விமானங்கள் லக்னோவிலிருந்து 288 யாத்ரீகர்களுடனும், ஹைதராபாத்திலிருந்து 262 யாத்ரீகர்களுடன் புறப்பட்டன. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சுமூகமான மற்றும் தடையற்ற ஹஜ் யாத்திரையை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பான, ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் ஆன்மீகம் நிரம்பிய புனித யாத்திரைக்காக தான் பிரார்த்தித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
-----
(Release ID: 2125117)
TS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2125142)
आगंतुक पटल : 40