நிலக்கரி அமைச்சகம்
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக எஃகு உள்ளது: மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி
Posted On:
26 APR 2025 2:56PM by PIB Chennai
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி மும்பையில் இன்று எஃகுத் துறை குறித்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முதன்மையான சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டில் உரையாற்றினார். எஃகு குறித்த சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாடு, கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரிடையே எஃகு துறையின் வளர்ந்து வரும் இயக்கவியல் மற்றும் நிலக்கரித் தொழிலுடனான அதன் இணக்கமான உறவு குறித்து கலந்துரையாடுவதற்கான குறிப்பிடத்தக்க தளமாக செயல்பட்டது.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி தமது உரையில், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தின் முதுகெலும்பாக எஃகு உள்ளது என்று கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலம் முதல், தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பாம்பன் பாலம் வரை, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியா எவ்வாறு புதிய உலகளாவிய அளவுகோல்களை அமைத்து வருகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். இவை அனைத்தும் எஃகு துறையின் வளர்ந்து வரும் வலிமையால் சாத்தியமாகியுள்ளன. நாட்டின் உள்கட்டமைப்பு பயணத்தில் ஒவ்வொரு மைல்கல்லும் எஃகில் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இது முன்னேறி வரும் ஒரு தேசத்தின் வேகம் மற்றும் அபிலாஷைகளை பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் எஃகுத் துறை சமீபத்திய ஆண்டுகளில் ஈர்க்கக்கூடிய வேகத்தில் வளர்ந்துள்ளது, உலகளவில் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராக நாட்டை நிலைநிறுத்தியுள்ளது என்று அவர் கூறுகிறார். இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக எஃகு விளங்குகிறது என்றால், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை வலுவான அடித்தளத்தை பிரதிபலிக்கிறது என்று திரு ரெட்டி குறிப்பிட்டார். இரும்புத் தாது, கரி நிலக்கரி, சுண்ணாம்புக்கல் போன்ற முக்கிய மூலப்பொருட்கள் மற்றும் மாங்கனீசு, நிக்கல் மற்றும் குரோமியம் போன்ற அத்தியாவசிய கலவை கூறுகள் கிடைப்பதை உறுதி செய்வது ஒரு பொருளாதார தேவை மற்றும் கட்டாயம் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா சமீபத்தில் ஒரு மைல்கல்லை எட்டியது - இது தேசிய எரிசக்தி பாதுகாப்பை நோக்கிய ஒரு மாற்றத்தக்க படியாகும். இந்தியாவின் மொத்த எரிசக்தி தேவைகளில் கிட்டத்தட்ட 60% மற்றும் அதன் மின்சார உற்பத்தியில் 70% நிலக்கரி தொடர்ந்து உள்ளது என்பதை ஆற்றல் புள்ளிவிவரங்கள் 2025 வெளிப்படுத்துகின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் இந்தியாவின் எரிசக்தி மற்றும் தொழில்துறை நிலப்பரப்பில் நிலக்கரி மையமாக இருக்கும் என்று அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
எஃகு உற்பத்தியில் முக்கிய உள்ளீடான கோக்கிங் நிலக்கரி பற்றி குறிப்பிட்ட திரு ரெட்டி, எஃகு உற்பத்தி செலவில் இது கிட்டத்தட்ட 42% ஆகும் என்று சுட்டிக்காட்டினார். இந்தியா தற்போது தனது கோக்கிங் நிலக்கரி தேவைகளில் 85% இறக்குமதி செய்கிறது, இது சர்வதேச விலை ஏற்ற இறக்கம் மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகளுக்கு தொழில்துறையை பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது. இதனைச் சமாளிக்கும் விதமாக, இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பது, 140 மெட்ரிக் டன் உள்நாட்டு உற்பத்தியை இலக்காகக் கொண்டது. 2030 க்குள் எஃகு தயாரிப்பில் உள்நாட்டு நிலக்கரியை 10% முதல் 30% வரை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட மிஷன் கோக்கிங் நிலக்கரியை அரசு 2021 இல் தொடங்கியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124513
*****
PKV/SG
(Release ID: 2124553)
Visitor Counter : 15