நிதி அமைச்சகம்
சரக்குப்போக்குவரத்து முறை மாற்றம் மற்றும் விமானம்வழி சரக்கு போக்குவரத்து தொடர்பான பல்வேறு வர்த்தக வசதிகளுக்கான நடைமுறைகளை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி வாரியம் அறிமுகப்படுத்துகிறது
Posted On:
25 APR 2025 5:02PM by PIB Chennai
மத்திய அரசின் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளுக்கு ஏற்ப, உயர் மதிப்பு கொண்ட விமான சரக்குகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், கிடங்கு வசதிகள், விரைவில் அழுகக்கூடிய தோட்டக்கலைப் பொருட்களைப் பாதுகாப்பதற்கான வசதிகள், சுங்க நெறிமுறைகள், எளிமையான வரி நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பயனர்களுக்கு கிடைக்கும் வகையில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம் பல்வேறு வர்த்தக நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, விமானம் மற்றும் கப்பல் சரக்குப் போக்குவரத்திற்கான வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் அதுசார்ந்த நடைமுறைகள் இதில் அடங்கும்.
இறக்குமதி செய்யப்படும் சரக்குகளை சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் அல்லது கிடங்குகளில் இருந்து இறக்குமதி வரி செலுத்தாமல் மாற்றுமுறை சரக்குப்போக்குவரத்தை கையாள்வதற்கான நடைமுறைகளில் சில மாற்றங்களை மறைமுக வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி மாற்றுமுறை சரக்குப் போக்குவரத்து மேற்கொள்ளும் போது, அதற்கான அனுமதி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றுமுறை தொடர் சரக்குப்போக்குவரத்திற்கான சுங்க கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த நடைமுறை ஏப்ரல் 24-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124318
***
TS/SV/RJ/DL
(Release ID: 2124409)
Visitor Counter : 11