நிதி அமைச்சகம்
மத்திய நிதி இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி பாலசமுத்திரத்தில் 75 ஆவது தொகுப்பு இந்திய வருவாய் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) பயிற்சி அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்புக்கு தலைமை தாங்கினார்
Posted On:
25 APR 2025 4:01PM by PIB Chennai
பாலசமுத்திரத்தில் உள்ள நாசின் வளாகத்தில் 25 ஆண்கள் மற்றும் 17 பெண் அதிகாரிகள் உட்பட 42 இந்திய வருவாய் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) பயிற்சி அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்புக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி தலைமை தாங்கினார். பூடான் ராயல் அரசைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகளும் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.
பாலசமுத்திரத்தில் உள்ள தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் அகாடமியின் பயிற்சி நிறைவு அணிவகுப்பானது தீவிர 18 மாத பயிற்சித் திட்டத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் நடத்தப்பட்டது. இந்தியாவின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட கர்மயோகிகளாக தங்கள் பயணத்தை இந்த அதிகாரிகள் தொடங்குகின்றனர்.
பஹல்காம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் விழா தொடங்கியது, பாதிக்கப்பட்டவர்களின் நினைவைக் கௌரவிக்கும் வகையில் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் திரு சவுத்ரி, இந்த 75-வது தொகுப்பின் சாதனைகளைப் பாராட்டியதோடு, வெளிப்படையான மற்றும் பொறுப்பான வரி முறையை உருவாக்குவதில் அவர்களின் கடப்பாட்டை வலியுறுத்தினார். பொருளாதார வளர்ச்சியில் ஐஆர்எஸ் அதிகாரிகளின் பங்கை எடுத்துரைத்த திரு சவுத்ரி, அவர்கள் தைரியத்துடனும் தெளிவுடனும் நாட்டை வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக சமத்துவத்தை ஊக்குவிப்பதன் மூலம் அரசின் தொலைநோக்கு பார்வையான வளர்ச்சியடைந்த இந்தியாவை முன்னெடுத்துச் செல்வதில் அவர்களின் திறன் குறித்து அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிபிஐசியின் தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால், சிபிஐசி உறுப்பினர் திருமதி அருணா நாராயண் குப்தா, நாசின் தலைமை
இயக்குநர் டாக்டர் எம். சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்செய்திக்குறிப்பைகுஃ காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124290
***
(Release ID: 2124290)
TS/PKV/RR/KR
(Release ID: 2124343)
Visitor Counter : 15