பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் பத்தாண்டு காலமாக பஞ்சாயத்து ராஜ் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதற்கு மத்திய அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் பாராட்டு
Posted On:
24 APR 2025 6:45PM by PIB Chennai
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, ஏப்ரல் 24, 2025 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னிலையில் பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள லோஹ்னா உத்தர் கிராம பஞ்சாயத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஆகியோரின் துடிப்பான பங்கேற்பால் தேசிய நினைவுகூரல் குறிக்கப்பட்டது. ரூ.13,480 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார் / அடிக்கல் நாட்டினார். வீட்டுவசதி, ஊரக வளர்ச்சி, மின்சாரம், போக்குவரத்து, இணைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் தனது உரையில், அடிமட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும், ஊரக மாற்றத்திற்கான உந்து சக்தியாக பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் அளிப்பதிலும் அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். கிராம சுயாட்சியின் உணர்வையும், வளர்ச்சியடைந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதில் பஞ்சாயத்துகளின் பங்கையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் தனது உரையில், கடந்த பத்தாண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள பஞ்சாயத்துகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எடுத்துரைத்தார். இ-கிராம்ஸ்வராஜ் போன்ற டிஜிட்டல் தளங்கள் எவ்வாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்து, கிராமப்புற இந்தியாவில் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் வாழ்க்கையை எளிதாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளன என்பதை அவர் வலியுறுத்தினார். கடந்த 10 ஆண்டுகளில் 13-வது நிதிக் குழுவுடன் ஒப்பிடுகையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பகிர்வு கணிசமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
"கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்துகள் முழுமையாக வளர்ச்சியடையும் வரை உண்மையான வளர்ச்சியடைந்த இந்தியாவை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது" என்று திரு ராஜீவ் ரஞ்சன் சிங் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பீகார் ஆளுநர் திரு ஆரிப் முகமது கான், முதலமைச்சர் திரு நிதீஷ் குமார், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124144
***
(Release ID: 2124144)
RB/DL
(Release ID: 2124182)