கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
உள்நாட்டு நீர்வழிப் பாதைகளில் இந்தியாவின் சாதனை அளவான சரக்குப் போக்குவரத்து
Posted On:
24 APR 2025 4:12PM by PIB Chennai
தேசிய நீர்வழிப் பாதைகளில் கடந்த 10 ஆண்டுகளில் சரக்குப் போக்குவரத்து பெருமளவு அதிகரித்துள்ளது. நிதியாண்டு 2013-14-ல் தேசிய நீர்வழிப் பாதைகளில் 18.10 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த சரக்குப் போக்குவரத்து நிதியாண்டு 2024-25ல் 145.5 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்தது.
நிதியாண்டு 2024-ஐ விட நிதியாண்டு 2025-ல் சரக்குப் போக்குவரத்து 9.34%-ஐ பதிவு செய்தது. மொத்த சரக்குப் போக்குவரத்தில் நிலக்கரி, இரும்பு தாது, மணல், சாம்பல் ஆகியவை 68%-ஆக இருந்தது. 2023-24-ல் பயணிகள் போக்குவரத்தும் 1.61 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியது.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் பாதைகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய உள்நாட்டு நீர்வழிப் பாதைகள் ஆணையம் நீர்வழிப் பாதைகளின் எண்ணிக்கையை 5-லிருந்து 111-ஆக விரிவுப்படுத்தியது. 2014 முதல் நீர்வழிப் பாதைகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு ரூ.6,434 கோடி முதலீடு செய்துள்ளது.
2014-15 ல் 2716 கிலோமீட்டராக இருந்த தேசிய நீர்வழிப்பாதைகளின் தூரம் 2023-24 ல் 4894 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.
உள்நாட்டு நீர்வழிப் பாதைகள் மூலமான சரக்குப் போக்குவரத்திற்கு மத்திய அரசு இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இந்தியக் கடல்சார் தொலைநோக்குப் பார்வை 2030-ன் படி சரக்குப் போக்குவரத்தை 200 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடல்சார் அமிர்தகால தொலைநோக்குப் பார்வை 2047-ன் படி சரக்குப் போக்குவரத்தை 500 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை மேம்படுத்துவதில் இந்தியாவின் ஒருங்கிணைந்த முயற்சிகள் குறிப்பிடத்தக்க பயன்களை தந்துள்ளன. சரக்குப் போக்குவரத்தில் சாதனை படைக்கப்பட்டுள்ளதோடு உள்கட்டமைப்பும் விரிவாக்கப்பட்டுள்ளது. உத்திசார் முதலீடுகள், கொள்கை முன்முயற்சிகள், டிஜிட்டல் ரீதியான புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை இணைந்து உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து துறையை மேலும் விரிவுப்படுத்தியுள்ளன. இது நீடித்த போக்குவரத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124061
***
TS/SMB/SG/DL
(Release ID: 2124148)
Visitor Counter : 19