பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தற்சார்பு இந்தியாவைக் கட்டமைத்தல் ஸ்வாமித்வா திட்டத்தின் 5 ஆண்டுகள்

Posted On: 23 APR 2025 5:56PM by PIB Chennai

கிராமப்பகுதிகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் நிலங்களை அளந்து வரைபடமாக்குதல் என்ற ஸ்வாமித்வா திட்டம் 2020 ஏப்ரல் 24 அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு விழா  கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் வசிப்போருக்கு வீடுகள் மற்றும் நிலத்திற்கான சட்டப்பூர்வ உடைமை அட்டைகள் இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றன. ட்ரோன்களும், சிறப்பு வரைபட கருவிகளும்  பயன்படுத்தப்பட்டிருப்பதால் நிலத்தின் எல்லைகள் துல்லியமாக குறிக்கப்பட்டுள்ளன. ஸ்வாமித்வா திட்டத்தின் மூலம் பெறப்படும் சொத்து அட்டைகளைக் கொண்டு வங்கியில் கடன்கள் பெற முடியும்.

 தேசிய தகவல் சேவை மையத்தின் உதவியுடன் இந்திய நில அளவைத் துறையால் இந்தத் திட்டம் அமலாக்கப்படுகிறது. 2025-26 நிதியாண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு 2020-21 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை மொத்தம் ரூ.566.23 கோடி செலவிடப்பட்டுள்ளது.

ஸ்வாமித்வா திட்டத்தின் முக்கிய சாதனைகள்:

2025 ஜனவரி 18 அன்று சத்தீஸ்கர், குஜராத் உட்பட 10 மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 50,000-க்கும் அதிகமான கிராமங்களில் உள்ளவர்களுக்கு சுமார் 65 லட்சம் ஸ்வாமித்வா சொத்து அட்டைகள் வழங்கப்பட்டன.

2025 ஏப்ரல் 2 நிலவரப்படி, 3.20 லட்சம் கிராமங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் ட்ரோன்கள் மூலம் நில அளவை செய்து முடிக்கப்பட்டுள்ளது.  68,122 சதுர கி.மீ. நிலம் அளக்கப்பட்டுள்ளது.

2025 மார்ச் 11 நிலவரப்படி 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. 1.62 லட்சம் கிராமங்களுக்கு மொத்தம் 2.42 கோடி சொத்து அட்டைகள்  வழங்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123886

***

TS/SMB/AG/DL


(Release ID: 2123918) Visitor Counter : 16
Read this release in: English , Urdu , Hindi , Gujarati