இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
விளையாட்டுக் களத்திலும், களத்திற்கு வெளியேயும் சாம்பியன்களை உருவாக்குதல்-
இந்தியாவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான நலத்திட்டங்களும், ஆதரவும்
Posted On:
23 APR 2025 4:24PM by PIB Chennai
இந்திய விளையாட்டுகள் வரலாற்றில் கடந்த பத்தாண்டு பொற்காலமாகும். இந்தக் காலகட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகள் விளையாட்டில் நிகழ்த்தப்பட்டு உலகளாவிய அங்கீகாரம் அதிகரித்துள்ளது. ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் பதக்கங்கள் வெல்லப்பட்டிருக்கின்றன. தடகளப் போட்டிகள், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை போன்றவற்றில் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் சிறப்பான திறன்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஈட்டி எரிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற முதலாவது இந்தியராக உருவெடுத்தார்.
1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற 41 ஆண்டுகளுக்குப் பின், இந்தியாவின் ஹாக்கியும், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் பிரிவில் முதலாவது இந்திய வீராங்கனையாக மனு பாக்கர் பதக்கம் வென்றார்.
இந்தியாவின் எதிர்கால விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் துணிச்சல்மிக்க முடிவாக மத்திய அரசு 2025-26 நிதியாண்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கு சாதனை அளவாக ரூ.3794 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டு ஒதுக்கீட்டை விட ரூ.562 கோடி அதிகமாகும்.
கேலோ இந்தியா திட்டத்திற்கு ரூபாய் 1000 கோடி என்பதையும் உள்ளடக்கி மத்திய திட்டங்களுக்காக ரூ.2191.01 கோடி மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டுகள் சம்மேளனத்திற்கு ரூ.400 கோடி என நிதியுதவி அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி மற்றும் வசதிகளை அதிகரிக்க இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு ரூ.830 கோடி வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நல்வாழ்வு நிதியிலிருந்து ஒருமுறை கருணைத் தொகையாக ரூ.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. மாதாந்தர ஓய்வூதியம் ரூ.5000 ஆகவும், மருத்துவ உதவி ரூ.10 லட்சம் வரையும் அளிக்கப்படுகிறது. பயிற்சி அல்லது போட்டிக்காலத்தில் காயம் ஏற்பட்டால், சிகிச்சைக்காக ரூ.10 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. விளையாட்டு வீரர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரையும், பயிற்சியாளர்கள், விளையாட்டு நடுவர்கள், இயன்முறை மருத்துவர்கள் போன்ற விளையாட்டு உதவிப் பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரையும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123815
***
TS/SMB/AG/KR
(Release ID: 2123879)
Visitor Counter : 16