சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துணை சுகாதார தொழில்களுக்கான தேசிய ஆணையத்துடன் இணைந்து பத்து துணை மற்றும் சுகாதாரத் தொழில்களுக்கான புதிய திறன் அடிப்படையிலான பாடத்திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தொடங்கியுள்ளது

Posted On: 23 APR 2025 2:38PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், துணை சுகாதாரத் தொழில்களுக்கான ஆணையத்துடன் இணைந்து, பத்து துணை சுகாதார தொழில்களுக்கான திறன் அடிப்படையிலான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய சுகாதாரச் செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவத்சவா இன்று இந்தப் பாடத்திட்டத்தை தொடக்கி வைத்தார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ஹெகாலி ஜிமோமி, தேசிய குடியுரிமைத் திட்டத்தின் தலைவர் டாக்டர் யக்னா சுக்லா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்தப் புதிய பாடத்திட்டத்தில் உடல் இயக்கவியல் (பிசியோதெரபி) உட்பட பல்வேறு துணை சுகாதார தொழில்முறை சார்ந்த பாடத்திட்டங்களைக் கொண்டுள்ளது. பயன்பாட்டு உளவியல், மன ஆரோக்கியம்; ஆப்டோமெட்ரி; ஊட்டச்சத்து மற்றும் உணவியல்; டயாலிசிஸ் தெரபி தொழில்நுட்பம் மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை; கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பம்; மருத்துவ கதிரியக்கவியல் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம்; மயக்க மருந்து மற்றும் அறுவை சிகிச்சை மைய தொழில்நுட்பம்; சுகாதாரத் தகவல் மேலாண்மை உள்ளிட்ட பாடத்திட்டங்களும் இதில் அடங்கும். நாடு முழுவதும் சுகாதார நிபுணர்களின் கல்வி, பயிற்சியில் சீரான நடைமுறைகள் உறுதி செய்யப்படுவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் அதிகரித்து சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்ப  அணுகுமுறையையும் வலுப்படுத்துவதாக இது உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரச் செயலாளர் திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதற்கும், சுகாதாரத் துறை சார்ந்த அனைத்து பிரிவுகளிலும் கல்வி மற்றும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாகத் தெரிவித்தார். இந்தப் "பாடத்திட்டத்தின் விரிவான திருத்தம் மற்றும் தரப்படுத்தல் நடவடிக்கைகள் அதன் கற்றல் முறையையும், நிலைத்தன்மையையும் உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய படியாகும்" என்று அவர் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123765

***

TS/SV/RJ/KR


(Release ID: 2123820)
Read this release in: English , Urdu , Marathi , Hindi