வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வளர்ந்த பாரதத்திற்காக, கிராமங்களுக்கு அதிகாரம் அளிக்கும் பஞ்சாயத்து ராஜ் தினத்தை கியூசிஐ கொண்டாடியது
Posted On:
22 APR 2025 6:34PM by PIB Chennai
இந்திய தர கவுன்சிலான கியூசிஐ, ஜல் சக்தி அமைச்சகத்துடன் இணைந்து 'தூய்மையான மற்றும் சுஜல் கிராமங்களுக்கான தலைமைத்துவம்' என்ற கருப்பொருளுடன் பஞ்சாயத்து ராஜ் தினத்தைக் கொண்டாடியது.
இந்திய தர கவுன்சிலின் முன்முயற்சியான சர்பஞ்ச் சம்வாத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, கிராமப்புற இந்தியாவில் தரம் சார்ந்த மாற்றத்தை இயக்குவதில் அடிமட்ட தலைவர்களின் பங்கை எடுத்துரைத்தது. இது நாடு முழுவதும் இருந்து 200 க்கும் மேற்பட்ட தலைவர்கள், கொள்கை தலைவர்கள், பாட வல்லுநர்கள் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகளை ஒன்றிணைத்தது.
அடிமட்ட மக்களுக்கான கியூசிஐ-இன் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல், "கியூசிஐயின் சர்பஞ்ச் சம்வாத் என்பது ஒரு சக்திவாய்ந்த தளமாகும், அங்கு தலைவர்கள் தங்கள் அடிப்படை அளவிலான கவலைகளை நேரடியாக எழுப்ப முடியும், அதை அமைச்சகம் தீர்வுக்கு முன்னெடுத்துச் செல்லும். 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்ற, மழைநீர் சேகரிப்பு போன்ற முயற்சிகள் மூலம் தூய்மையான மற்றும் சுஜல் கிராமங்களை சர்பஞ்ச்கள் முன்னெடுக்க வேண்டும். பாரதத்தின் குரல் கிராமத்தில் தொடங்குகிறது, அது உச்சியில் எதிரொலிக்க வேண்டும்”, என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் திரு அசோக் கே.கே.மீனா, இந்திய தர கவுன்சில் தலைவர் திரு. ஜக்சே ஷா, பொதுச் செயலாளர் திரு சக்ரவர்த்தி டி.கண்ணன், நிர்வாகக் குழுவின் இணை உறுப்பினர் திரு. ஹிமான்ஷு படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123542
***
RB/DL
(Release ID: 2123623)
Visitor Counter : 10