தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சர்வதேச தொலைத்தொடர்பு யூனியனில் (ஐ.டி.யு) உயர் தலைமைப் பதவிக்கு இந்தியா உரிமை கோருகிறது
प्रविष्टि तिथि:
22 APR 2025 12:13PM by PIB Chennai
சர்வதேச தொலைத்தொடர்பு யூனியனின் ரேடியோ தொலைத்தொடர்பு பணியக இயக்குநர் பதவிக்கு தொலைத் தொடர்புத் துறையின் இணை வயர்லெஸ் ஆலோசகர் திருமதி எம்.ரேவதியை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. உலகளாவிய ரேடியோ ஸ்பெக்ட்ரம் நிர்வாகத்தில் செல்வாக்கு செலுத்தும் இந்தியாவின் மிக முக்கியமான முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
எம்.ரேவதி தேர்ந்தெடுக்கப்பட்டால், உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பணியகத்தை வழிநடத்தும் சர்வதேச தொலைத்தொடர்பு யூனியனின் முதல் பெண் பிரதிநிதியாக இருப்பார்.
ஸ்பெக்ட்ரம் மற்றும் செயற்கைக்கோள் சுற்றுப்பாதை மேலாண்மையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட திருமதி ரேவதி, ஒழுங்குமுறை சார்ந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளில் முன்னோடியாக விளங்குகின்றார். அவர் தற்போது சர்வதேச தொலைத்தொடர்பு யூனியனின் வானொலி ஒழுங்குமுறை வாரியத்தில் பணியாற்றுகிறார்.
***
(Release ID: 2123374)
TS/GK/RR/KR
(रिलीज़ आईडी: 2123403)
आगंतुक पटल : 42