ஆயுஷ்
நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் சர்வதேச யோகா தினம் 2025-க்கு ஓட்டல் மற்றும் விடுதி கூட்டமைப்பு தயாராகிறது
Posted On:
21 APR 2025 6:22PM by PIB Chennai
நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் யோகாவை கொண்டு செல்ல வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை தொடர்ந்து பொது யோகா நிகழ்வுகளில் தனியார் துறையும் முன்னணி பாத்திரம் வகிக்கிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் சர்வதேச யோகா தினம் 2025-க்கு ஓட்டல் மற்றும் விடுதி கூட்டமைப்பு தயாராகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் முல்ஷியில் உள்ள ஆத்மாந்தன் நல்வாழ்வு மையத்தில் 2025 ஏப்ரல் 22 அன்று யோகா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயற்கையுடன் மனிதர்களுக்கான ஆழ்ந்த தொடர்பை எடுத்துரைப்பதாக இந்த நிகழ்வு இருக்கும்.
2025 ஏப்ரல் 29 அன்று கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தக் கூட்டமைப்பின் விருந்தோம்பல் நிர்வாக கழக வளாகத்தில் யோகா நிகழ்வு நடைபெறும். இதே போல் பெங்களூருவில் உள்ள ஜேடபிள்யு மேரியாட்டில் 2025 மே 17 அன்று யோகா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய ஒத்துழைப்பு முயற்சிகள் மூலம் வாழ்க்கை முறையாக யோகா என்ற செய்தியை பரவலாக்குவது கூட்டமைப்பின் நோக்கமாகும். இந்தியாவில் ஆழமாக வேரூன்றியுள்ள யோகா பாரம்பரியம் இன்று உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொருத்தமானதாக உள்ளது.
யோகா இயக்கத்தில் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதில் ஓட்டல் மற்றும் விடுதி கூட்டமைப்பு பெருமிதம் கொள்வதாக அதன் உதவி பொதுச் செயலாளர் திருமதி பாயல் சுவாமி தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், தாக்கம் மிக்கதாகவும் மாற்றுவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123245
***
SMB/RR/KR/DL
(Release ID: 2123260)
Visitor Counter : 14