கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அருணாச்சலப் பிரதேசத்தில் கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து சர்வதேச புத்தமத கூட்டமைப்பு இரண்டு நாள் சர்வதேச மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 21 APR 2025 5:18PM by PIB Chennai

பல நூற்றாண்டுகள் பழமையான புத்த மத கலாச்சாரம் மற்றும் மரபுகளில் வேரூன்றிய, அருணாச்சல பிரதேசத்தின் கடைக்கோடியில் உள்ள நம்சாய் மாவட்டம், தற்போதும் கூட ஒரு பழங்கால வாழ்க்கை முறை எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பதற்கு ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று புத்த தம்மம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் கலாச்சாரம் குறித்த சர்வதேச மாநாட்டில் அருணாச்சலப் பிரதேசத்தின் துணை முதலமைச்சர் திரு சௌனா மெயின் விளக்கினார்.

அருணாச்சலப் பிரதேசத்தில், குறிப்பாக நம்சாய் மற்றும் சாங்லாங் மற்றும் இட்டாநகர் போன்ற பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பௌத்த திருவிழாவான சோங்பா நீர்த் திருவிழாவை தாங்கள் சமீபத்தில் நிறைவு செய்ததாகவும் அது மாபெரும் வெற்றியைப் பெற்றது என்றும் அவர் தெரிவித்தார். மாநிலத்தில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய பல முக்கியமான பண்டைய யாத்திரை தலங்களும் உள்ளன என்று அவர் கூறினார்.

உண்மையில், தமது பழங்குடியினரான டாய் காம்டிஸ் 1839 ல் பிரிட்டிஷாருக்கு எதிராக முதல் சுதந்திரப் போரை நடத்திய முதல் பழங்குடியினர் என்று அவர் கூறினார். "ஆங்கிலேய-காம்தி போரில் நாங்கள் பிரிட்டிஷாரைத் தோற்கடித்தோம், இதன் விளைவாக, ஆங்கிலேயர்கள் எங்கள் கிராமங்களை எரித்தனர், வடகிழக்கின் பல பகுதிகளில் எங்கள் பழங்குடியினரை சிதறடித்தனர்" என்று அவர் குறிப்பிட்டார்.

திரு மெய்னின் கூற்றுப்படி, அவர்கள் தங்கள் காம்தி எழுத்துமுறை மூலம் பாலி மொழியைப் பாதுகாத்துள்ளனர். உண்மையில், மாநிலத்தில் இரண்டு பண்டைய எழுத்துக்கள் மட்டுமே உள்ளன: அவர்களுடையது (லிக் தாய்) மற்றும் போதி. ராமாயணமும், மகாபாரதமும் கூட காம்தி லிபியில் (லிக் தாய்) எழுதப்பட்டுள்ளன.

மகாபோதி சங்கம் இப்பகுதியில் மேற்கொண்டு வரும் மகத்தான "நல்ல பணிகளை" துணை முதலமைச்சர் விளக்கினார். மேலும் பிராந்தியத்தின் இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதற்கான திறன் மேம்பாட்டு மையம் இப்பகுதியில் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.

அருணாச்சல பிரதேச அரசு மற்றும் நம்சாய் மகாபோதி சங்கத்தின் ஆதரவுடன் கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து சர்வதேச பௌத்த கூட்டமைப்பு (ஐபிசி) ஏற்பாடு செய்திருந்த 2 நாள் சர்வதேச மாநாட்டில் அவர் உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் சங்கங்களின் தலைவர்கள், பிக்குகள் மற்றும் பிக்குனிகள், சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், வடகிழக்கு மற்றும் பிற பிராந்தியங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பூட்டான், மியான்மர், கம்போடியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கருத்தரங்கு அமர்வுகளில் பங்கேற்றனர்.  குவஹாத்தியில் உள்ள பூட்டான் தூதர் திரு ஜிக்மே தின்லி நம்கியால் தொடக்க அமர்வில் உரையாற்றினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123208

***

 

TS/IR/LDN/KR/DL


(Release ID: 2123257) Visitor Counter : 10
Read this release in: English , Urdu , Hindi