தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
பாரத் நெட்
Posted On:
21 APR 2025 2:48PM by PIB Chennai
பாரத்நெட் திட்டம் என்றால் என்ன?
பாரத்நெட் என்பது நாட்டில் உள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் அகன்ற அலைவரிசை இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் லட்சிய திட்டமாகும். இது உலகின் மிகப்பெரிய கிராமப்புற தொலைத் தொடர்பு திட்டங்களில் ஒன்றாகும்.
பாரத்நெட் திட்டத்தின் நோக்கம் என்ன?
அனைத்து தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அகன்ற அலைவரிசை இணைப்புக்கான தடையற்ற அணுகலை வழங்குவதே முதன்மை நோக்கமாகும். இது மொபைல் ஆபரேட்டர்கள், இணைய சேவை வழங்குநர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போன்ற அணுகல் வழங்குநர்களை கிராமப்புற மற்றும் தொலை தூரப் பகுதிகளில் மின்-சுகாதாரம், மின்-கல்வி மற்றும் மின்-ஆளுகை போன்ற பல்வேறு சேவைகளைத் தொடங்க உதவுகிறது. இது கிராமப்புறத்தை மேம்படுத்துதல், உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
பாரத்நெட் திட்டத்தின் கீழ் எத்தனை கிராம பஞ்சாயத்துகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன?
இந்தத் திட்டம் தொடக்கத்தில் நாடு முழுவதும் சுமார் 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளை இணைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
பாரத்நெட் திட்டத்தின் வெவ்வேறு கட்டங்கள் என்ன?
30.04.2016 அன்று தொலைத் தொடர்பு ஆணையம் இத்திட்டத்தை மூன்று கட்டங்களாக செயல்படுத்த ஒப்புதல் அளித்தது:
o கட்டம் I: தற்போதுள்ள கட்டமைப்பைப் பயன்படுத்தி 1 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளை இணைக்க கண்ணாடி இழை கேபிள்களை அமைப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் கட்டம் டிசம்பர் 2017 இல் நிறைவடைந்தது
o கட்டம் II (நடைபெற்றுக் கொண்டிருக்கிறது): கண்ணாடி இழை, ரேடியோ மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கூடுதலாக 1.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்துதல். இந்தக் கட்டம் மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளை உள்ளடக்கியது.
o கட்டம் III (நடைபெற்றுக் கொண்டிருக்கிறது): 5 ஜி தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலமும், அலைவரிசை திறனை அதிகரிப்பதன் மூலமும், வலுவான கடைக்கோடி வரையிலான இணைப்பை உறுதி செய்வதன் மூலமும் கட்டமைப்பை எதிர்காலத்தில் சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
****
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123137
TS/IR/LDN/KR
(Release ID: 2123163)
Visitor Counter : 19