நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
சட்டமுறை அளவீட்டு பொது விதிகள் - 2011-ன் கீழ் வாகனங்களின் வேகத்தை அளவிடுவதற்கான ரேடார் கருவிகளுக்கான விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது - 2025 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது
Posted On:
18 APR 2025 12:34PM by PIB Chennai
சாலை பாதுகாப்பை வலுப்படுத்தவும், போக்குவரத்தில் ஒழுங்கை உறுதி செய்யவும், நுகர்வோர் விவகாரங்கள் துறை சட்டமுறை அளவியல் பொது விதிகள்- 2011-ன் கீழ் வாகனங்களின் வேகத்தை அளவிடுவதற்கான ரேடார் உபகரணங்களுக்கான விதிகளை அறிவித்துள்ளது. இந்த விதிகள் 2025 ஜூலை 01 முதல் நடைமுறைக்கு வரும். இது தொழில்கள், அமலாக்க நிறுவனங்கள் விதிகளுக்கு இணங்க செயல்பட போதுமான கால அவகாசத்தை வழங்குகிறது.
இந்த விதிகள் அனைத்து ரேடார் அடிப்படையிலான வேக அளவீட்டு உபகரணங்களும் சட்ட அளவியல் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு முத்திரையிடப்படுவதை கட்டாயமாக்குகின்றன. இது அத்தகைய சாதனங்கள் துல்லியமானவை, அளவீடு செய்யப்பட்டவை, சட்டபூர்வமாக இணக்கமானவை என்பதை உறுதி செய்யும். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை, பொதுமக்களின் நம்பிக்கை, அமலாக்க ஒருங்கிணைப்பு ஆகியவை மேம்படும். போக்குவரத்து வேக கண்காணிப்பு, விபத்து தடுப்பு, சாலை உள்கட்டமைப்பில் தேய்மானம் போன்ற பயன்பாடுகளுக்கு சரிபார்க்கப்பட்ட ரேடார் அமைப்புகள் இன்றியமையாதவை.
இந்த விதிகளை அமல்படுத்துவதால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கும். சாதாரண குடிமகனைப் பொறுத்தவரை, ரேடார் அடிப்படையிலான வேக அளவீடு துல்லியத்தை உறுதி செய்யும். இதன் மூலம் நியாயமற்ற அபராதங்களைத் தடுக்க முடியும்.
விரிவான விதிகளை இந்த இணையதள இணைப்பில் காணலாம்: https://consumeraffairs.nic.in/sites/default/files/uploads/legal-metrology-acts-rules/Radar%20Equipment%20Gen%20Rules%20Amendment.pdf
***
(Release ID: 2122625)
SV/PLM/RJ
(Release ID: 2122661)
Visitor Counter : 61