பாதுகாப்பு அமைச்சகம்
இரண்டு நாள் பிரிட்டன் பயணத்தை நிறைவு செய்தார் பாதுகாப்பு செயலாளர்: 24-வது இந்தியா-இங்கிலாந்து பாதுகாப்பு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இணைத் தலைமை வகித்தார்
Posted On:
18 APR 2025 9:40AM by PIB Chennai
பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் 2025 ஏப்ரல் 16, 17-ம் தேதிகளில் லண்டனில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்துடனான வருடாந்திர இருதரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்கான உயர்மட்ட இந்திய தூதுக்குழுவுக்கு அவர் தலைமை வகித்து சென்றிருந்தார். இந்தப் பயணத்தின்போது, 24-வது இந்திய-இங்கிலாந்து பாதுகாப்பு ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு, இங்கிலாந்து பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு. டேவிட் வில்லியம்ஸுடன் இணைந்து திரு ஆர்.கே. சிங் தலைமை வகித்தார்.
வளர்ந்து வரும் பிராந்திய மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் சூழல்களை இரு தரப்பினரும் ஆய்வு செய்தனர். பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். 2021-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட விரிவான உத்திசார் ஒத்துழைப்பு, 2030-ம் ஆண்டிற்கான கூட்டு செயல்திட்டம் ஆகியவை தொடர்பாகவும் விவாதங்கள் நடைபெற்றன.
இங்கிலாந்து- இந்தியா வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த இந்திய-இங்கிலாந்து பாதுகாப்பு தொழில்துறை வட்டமேஜை மாநாட்டில் உரையாற்றிய திரு ராஜேஷ் குமார் சிங், கடற்படை அமைப்புகள், ஆளில்லா விமானங்கள், கண்காணிப்பு, விண்வெளி, விமானப் போக்குவரத்து போன்ற முக்கிய பாதுகாப்புத் துறைகளில் இந்திய புத்தொழில் நிறுவனங்களின் திறன்களை எடுத்துரைத்தார்.
***
(Release ID: 2122599)
SV/PLM/RJ
(Release ID: 2122635)
Visitor Counter : 18