மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பிரேர்ணா ஸ்தலத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணை தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

Posted On: 14 APR 2025 3:17PM by PIB Chennai

பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்னா ஸ்தலில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு. ஜக்தீப் தன்கர், பிரதமர் திரு. நரேந்திர மோடி, மக்களவைத் சபாநாயகர் திரு. ஓம் பிர்லா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ், தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் அவரது உருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாக மைய மண்டபத்தில் உள்ள பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மக்களவை, மாநிலங்களவையின் பொதுச் செயலாளர்கள் திரு உத்பல் குமார் சிங் மற்றும் திரு பி.சி.மோடி ஆகியோரும் அவரது உருவப்  படத்திற்கு  மலர் அஞ்சலி செலுத்தினர்.

பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நாட்டின் சமூகம் மற்றும் அரசியலில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி, ஒரு நிலையான பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார். சமூக நீதியின் சாதனையாளராகப் புகழ்பெற்ற இவர், இந்திய சமூகத்திற்கு அவர் ஆற்றிய கணிசமான மற்றும் மாறுபட்ட பங்களிப்புகளுக்காக என்றென்றும் மக்களால் மதிக்கப்படுகிறார். டாக்டர் அம்பேத்கரின் குறிப்பிடத்தக்க சாதனை இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அவர் பங்களித்துள்ளார். அங்கு அவர் அரசியலமைப்புச் சட்டம் குறித்து அவையில் இருந்து நடைபெற்ற விவாதங்களில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உந்து சக்தியாக அவர் மதிக்கப்படுகிறார். அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் நீதியின் கொள்கைகளை உறுதி செய்கிறார்.

பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் உருவப்படம் நாடாளுமன்ற வளாகத்தின் (முந்தைய நாடாளுமன்ற இல்லம்) மைய மண்டபத்தில்1990 - ம் ஆண்டு ஏப்ரல் 12 - ம் தேதி அன்று அப்போதைய பிரதமர் திரு. விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

முன்னதாக, டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திய திரு. ஓம் பிர்லா, சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி, நாட்டின் முதலாவது சட்டத்துறை அமைச்சர், பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அவர்கள் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பாபாசாகேப் அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் சமத்துவம், சுதந்திரம், நீதி மற்றும் சகோதரத்துவத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த அவர், சமூகத்தில் விரும்பிய மாற்றங்களைக் கொண்டுவர கல்வியை ஒரு ஊடகமாகப் பயன்படுத்தினார். அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழுவின் தலைவராக, உலகின் மிகச் சிறந்த சட்டமன்ற ஆவணமான 'இந்திய அரசியலமைப்பு' என்ற ஆவணத்தை உருவாக்கினார். அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75-வது ஆண்டை நாம் கொண்டாடும் இந்த வேளையில், பாபாசாகேப்பின் தத்துவம் மேலும் பொருத்தமானதாக உள்ளது. அனைத்து வகையான அநீதி, சுரண்டல் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபட அவரது கருத்துக்கள் நமக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளன. ஷெட்யூல்டு வகுப்பினரின் மேம்பாட்டிற்காகவும், தேசத்தின் அதிகாரமளிப்பதற்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை, பல யுகங்களாக லட்சக்கணக்கான நாட்டு மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2121579

***

TS/SV/KPG/RJ


(Release ID: 2121674) Visitor Counter : 15