பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடலோர காவல்படை, குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகியவை இணைந்து ரூ.1,800 கோடி மதிப்பிலானபோதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளன

Posted On: 14 APR 2025 11:33AM by PIB Chennai

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒரு பெரிய முன்னேற்றமாக, இந்திய கடலோர காவல்படையானது (ஐ.சி.ஜி), குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையுடன் (ஏ.டி.எஸ்) இணைந்து 2025 - ம் ஆண்டு    ஏப்ரல் 12 & 13 - ம் தேதிகளில், மேற்கொண்ட நடவடிக்கைகளில்,ரூ.1,800 கோடி மதிப்பிலான 300 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்களை (மெத்தாம்பெட்டமைன்) பறிமுதல் செய்துள்ளது.

குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அளித்த தகவலின்  அடிப்படையில், வடக்கு மகாராஷ்டிரா / தெற்கு குஜராத் பகுதிகளில்   கடலோர காவல்படைக்குச் (மேற்கு) சொந்தமான கப்பல் மேற்கொண்ட பன்முக நடவடிக்கைகளின்போது, சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் ஒரு படகை இடைமறித்தது. இந்நிலையில்,  சந்தேகத்திற்குரிய அந்தப் படகு சர்வதேச கடல் எல்லையை நோக்கி தப்பிச் செல்லத் தொடங்குவதற்கு முன்பு, அதிலிருந்த போதைப்பொருட்களை கடலில் கொட்டியது. இதனையடுத்து, கடலோரக் காவல் படைக் கப்பல் உடனடியாக அந்த படகை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இருப்பினும், அந்த  சந்தேகத்திற்கிடமான படகை தடுத்து நிறுத்த முடியாமல் போனது. இதற்கிடையில், கடலோரக் காவல் படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, கடலில் வீசப்பட்ட கணிசமான அளவு போதைப்பொருட்கள் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விசாரணைக்காக  போர்பந்தருக்கு கொண்டு செல்லப்பட்டன. அண்மைக் காலங்களில் இதுபோன்ற 13 கடத்தல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு, சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டது.  இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு ஆகியவற்றின் இந்த கூட்டு முயற்சியானது தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது.                                                                      

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2121529

***

TS/SV/KPG/DL


(Release ID: 2121666) Visitor Counter : 17