உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் நடைபெற்ற குஜராத்தி வார இதழான 'சித்ரலேகா'வின் 75-வது நிறுவன தின கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்

Posted On: 12 APR 2025 9:31PM by PIB Chennai

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நடைபெற்ற குஜராத்தி வார இதழான 'சித்ரலேகா'வின் 75-வது நிறுவன தின கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், மாநில துணை முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பல புகழ்பெற்ற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 'சித்ரலேகா'வின் 75 ஆண்டுகால பயணம் குஜராத்தி இலக்கியம், சமூகம், வாழ்க்கை முறை மற்றும் குஜராத் மற்றும் தேசம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் கண்ணாடியாக உள்ளது என்றார். சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இலக்கியம் முன்னேற முடியாது என்று திரு அமித் ஷா கூறினார். இலக்கியம், சமூகத்தின் தேவை. குஜராத்தி இலக்கிய இதழ்கள் நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளன, என்றார் அவர்.

‘சித்ரலேகா'வில் வெளியிடப்பட்ட நாவல்கள் மூலம் சமூகத்தை ஒற்றுமையாக வைத்திருக்க ஒரு வெற்றிகரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இது குஜராத்தி படிக்கும் இளைஞர்களை படிக்கத் தூண்டியது. 


மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2121330

****


RB/DL


(Release ID: 2121483) Visitor Counter : 9