இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பீகார் மாநிலம் பாட்னாவில் 'ஜெய் பீம் பாதயாத்திரை' மேற்கொண்டார் - 6,000-க்கும் மேற்பட்ட மை பாரத் தன்னார்வலர்கள் பாதயாத்திரையில் பங்கேற்பு

Posted On: 13 APR 2025 2:05PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று (13.04.2025) வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெய் பீம் பாதயாத்திரைக்குத் தலைமை வகித்தார். இந்தப் பாதயாத்திரையை பீகார் சட்டப் பேரவைத் தலைவர் திரு நந்த் கிஷோர் யாதவ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில் 6,000- க்கும் மேற்பட்ட மை பாரத் இளைஞர் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இந்த பாதயாத்திரை பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பணிகளுக்கு ஒரு துடிப்பான அஞ்சலியாக அமைந்தது. இளைஞர்களின் ஈடுபாட்டுக்கும் அரசியலமைப்பின் மதிப்புகளுக்கும் இது வலு சேர்ப்பதாக அமைந்திருந்தது.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இந்திய இளைஞர்களின் வலிமையை எடுத்துரைத்ததோடு, புதிய இந்தியாவை கட்டமைக்கும் டாக்டர் அம்பேத்கரின் பாரம்பரியத்தின் வழிகாட்டிகளாக அவர்கள் மாற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

 

வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் பாபா சாகேப் அம்பேத்கர் பிற மாபெரும் தலைவர்கள் ஆகியோரது தொலைநோக்குப் பார்வையில் இருந்து உத்வேகம் பெற வேண்டும் என்று நாட்டின் இளைஞர்களை மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். உலகின் பல பகுதிகளில் பாலின சமத்துவம் அங்கீகரிக்கப்படாத 1947-ம் ஆண்டிலேயே பெண்களுக்கு சம உரிமையை உறுதி செய்வதில் பாபா சாகேப் அம்பேத்கரின் முன்னோடி பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார்.

 

இந்த தேசிய சின்னங்களின் கொள்கைகளைப் பின்பற்ற இளைய தலைமுறையினர் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த டாக்டர் மாண்டவியா, இளைஞர்கள் தலைமையிலான தேசிய வளர்ச்சியின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் உறுதியான தலைமையை பாராட்டிய பிரதமர், வலுவான, தற்சார்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய விக்சித் பாரதத்தை உருவாக்க பிரதமரின் கனவான பஞ்ச் பிரானுடன் இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

 

பாத யாத்திரையின் வழியில் பல இடங்களில், கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மை பாரத் தன்னார்வலர்கள் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தொடர்பாற பாடல்களைப் பாடினர். பாட்னா உயர் நீதிமன்றம் அருகே பாதயாத்திரையின் முடிவில், அமைச்சர் மன்சுக் மாண்டவியா டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிலையைச் சுற்றி தூய்மை இயக்கத்தில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, அவர்கள் அம்பேத்கரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சிற்பிக்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தினர்.

 

டாக்டர் மன்சுக் மாண்டவியாவுடன் பீகார் துணை முதலமைச்சர்கள் திரு சாம்ராட் சௌத்ரி, திரு விஜய் குமார் சின்ஹா, முன்னாள் மத்திய அமைச்சரும் பாட்னா நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ரவிசங்கர் பிரசாத், மாநில அமைச்சர்கள் திரு நிதின் நபின், திரு சுரேந்திர மேகதா, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஷாம்பவி சௌத்ரி, உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

****

PLM/DL


(Release ID: 2121430) Visitor Counter : 25