பிரதமர் அலுவலகம்
தாரிபள்ளி ராமையா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
12 APR 2025 1:09PM by PIB Chennai
திரு. தாரிபள்ளி ராமையா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான மரங்களை நடவு செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த நிலைத்தன்மையின் சாம்பியன் என்று அவர் அவரைப் பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"தாரிபள்ளி ராமையா அவர்கள் நிலைத்தன்மையின் சாம்பியனாக நினைவுகூரப்படுவார். லட்சக்கணக்கான மரங்களை நட்டு பாதுகாப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது அயராத முயற்சிகள் இயற்கையின் மீதான ஆழ்ந்த அன்பையும் எதிர்காலச் சந்ததியினரின் மீதான அக்கறையையும் பிரதிபலித்தன. பசுமையான பூமியை உருவாக்கும் நமது இளைஞர்களின் தேடலில் அவரது பணி தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்தச் சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுடன் உள்ளன. ஓம் சாந்தி."
****
PKV/DL
(रिलीज़ आईडी: 2121189)
आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Kannada