வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமும் அருணாச்சலப் பிரதேச அரசும் இணைந்து அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கில் சர்வதேச மாநாடு மற்றும் வாங்குவோர்-விற்போர் சந்திப்பை நடத்துகின்றன

Posted On: 12 APR 2025 11:44AM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்திலிருந்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக,  அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கில் உள்ள கலவாங்போ மாநாட்டு மண்டபத்தில், சர்வதேச மாநாடு மற்றும் வாங்குவோர்-விற்போர் சந்திப்பை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்,  அருணாச்சலப் பிரதேச அரசுடன் இணைந்து  நடத்தியது.

அருணாச்சலப் பிரதேச முதல்வர் திரு பேமா கண்டு தனது முக்கிய உரையில், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், சுய உதவிக் குழுக்களை மேம்படுத்துவதற்கும் உறுதியளித்தார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவித்தார். தென்கிழக்கு ஆசிய மற்றும் ஆசியான் நாடுகளுக்கு காவ் தாய் அரிசி (காம்தி அரிசி என்று அழைக்கப்படுகிறது), மாண்டரின் ஆரஞ்சு, கிவி, ஆப்பிள், பெர்சிமன், யாக் சீஸ் (சுர்பி) போன்ற புவிசார் குறியீடுகளைக் கொண்ட விவசாய ஏற்றுமதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் சர்வதேச வாங்குபவர்களை மாநிலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கவும், மாநிலத்தின் பயன்படுத்தப்படாத திறனைப் பயன்படுத்தவும் அவர் ஊக்குவித்தார்.

சந்தை அணுகல், ஊக்குவிப்பு மற்றும் வெளிநடவடிக்கைக்காக முக்கிய தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்க அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள்,  விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் அடையாளம் காணப்படுவதை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத் தலைவர் திரு அபிஷேக் தேவ் ஊக்குவித்தார். சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி, உள்கட்டமைப்பு மேம்பாடு, பயிற்சி மற்றும் விவசாயிகளின் திறன் மேம்பாடு ஆகியவற்றிற்காக அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து கவனம் செலுத்தும் விவசாயப் பொருட்களை அடையாளம் கண்டு மேம்படுத்துவதற்கு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமும் அருணாச்சலப் பிரதேச அரசும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச மாநாடு மற்றும் வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், பூட்டான் ஆகிய 3 நாடுகளைச் சேர்ந்த 11 சர்வதேச வாங்குபவர்களுக்கும், அசாம், மகாராஷ்டிரா, தில்லி, ஹைதராபாத், கர்நாடகா, குஜராத்,  மேற்கு வங்காளம் ஆகிய 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 17 ஏற்றுமதியாளர்களுக்கும் இடையே நேரடி தொடர்புகளை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இருந்து பங்கேற்ற ஏற்றுமதியாளர்கள், வேளாண் விளைபொருட்களின் தரம், கிடைக்கும் தன்மை மற்றும் உற்பத்தி அளவுகளைப் புரிந்துகொள்ள, நிகழ்வில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 200 விவசாயிகளுடனும் தொடர்பு கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2121149

****

SMB/DL


(Release ID: 2121156) Visitor Counter : 30


Read this release in: English , Urdu , Hindi , Assamese