நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள்தான் நாட்டின் உண்மையான எரிசக்திப் போராளிகள்: மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி
Posted On:
10 APR 2025 7:36PM by PIB Chennai
சத்தீஸ்கரில் உள்ள தென்கிழக்கு நிலக்கரி வயல் நிறுவனத்தின் (எஸ்.இ.சி.எல்)கெவ்ரா சுரங்கத்தை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இன்று பார்வையிட்டார். உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி சுரங்கமாக அங்கீகரிக்கப்பட்ட கெவ்ரா, இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தி வலிமையின் அடையாளமாக நிற்கிறது. அமைச்சரின் வருகை முன்களப் பணியாளர்களுக்கான அரசின் உறுதிப்பாட்டையும், நிலக்கரித் துறையில் உற்பத்தித்திறன் மற்றும் நலன் இரண்டையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
எஸ்.இ.சி.எல் அதிகாரிகள் முக்கிய சாதனைகள் மற்றும் தற்போதைய முன்னேற்றங்களை எடுத்துக்காட்டிய விரிவான விளக்கக்காட்சியை வழங்கினர். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பின் இன்றியமையாத தூணாக விளங்கும் 24 மணி நேர நிலக்கரி உற்பத்தியை உறுதி செய்வதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை திரு. ரெட்டி பாராட்டினார்.
சுரங்கத்தின் மையப்பகுதியில் இறங்கிய அமைச்சர், உலகளவில் பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஹெவி எர்த் மூவிங் இயந்திரங்களில் 42-கன மீட்டர் திணி மற்றும் 240-டன் டம்பர் போன்ற மெகா உபகரணங்களை நிலைநிறுத்துவது உட்பட பெரிய அளவிலான சுரங்க நடவடிக்கைகளை கண்டார். வெடிப்பு இல்லாத மேற்பரப்பு சுரங்க தொழில்நுட்பத்தையும் அவர் மதிப்பாய்வு செய்தார் மற்றும் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலக்கரி வெளியேற்றத்தை நோக்கமாகக் கொண்ட முதல் மைல் இணைப்பு (எஃப்.எம்.சி) முன்முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட நவீன சைலோக்களைப் பார்வையிட்டார்.
இந்தப் பயணத்தின்போது, எஸ்.இ.சி.எல்-இன் பசுமை முயற்சிகள் குறித்தும் அமைச்சர் ஆராய்ந்தார். ஜப்பானிய புதுமையான காடு வளர்ப்பு நுட்பத்தைப் பயன்படுத்தி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள மியாவாக்கி தோட்ட முன்னோடி தளத்தை அவர் பார்வையிட்டார். கூடுதலாக, புதிதாக கட்டப்பட்ட கல்யாண் மண்டபத்தை அவர் திறந்து வைத்தார் - இது ஊழியர் நிகழ்வுகள் மற்றும் சமூக செயல்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பல்நோக்கு வசதியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120765
***
(Release ID: 2120765)
RB/RJ
(Release ID: 2120841)