பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய அரசு ஊழியர்களுக்கான பணி ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கை குவஹாத்தியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கிறார்
Posted On:
09 APR 2025 3:56PM by PIB Chennai
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்வியல் நடைமுறையை எளிதாக்கும் வகையிலும் மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்பவும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை ஓய்வூதியக் கொள்கையில் பல்வேறு முற்போக்கான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓய்வூதியம் தொடர்பான நடைமுறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பிரதமர் அலுவலக இணையமைச்சரும் ஊழியர் , ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங்கின் வழிகாட்டுதலின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு முந்தைய ஆலோசனை பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிலரங்கு ஏப்ரல் 10-ம் தேதி குவஹாத்தியில் உள்ள அசாம் நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும், ஓய்வு பெறவிருக்கும் அதிகாரிகளுக்கு அது தொடர்பான செயல்முறைகளை எளிதாக்கும் வகையில் ஓய்வுக்கு முந்தைய ஆலோசனை பயிலரங்கை மத்திய ஓய்வுத்துறை நடத்தி வருகிறது. மத்திய அரசின் ஊழியர்களின் நலனுக்காக இந்தப் பயிலரங்கு நடத்தப்படுகிறது. ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன் ஓய்வூதியப் பலன்கள், சுகாதார சேவைகள், உள்ளிட்ட பல்வேறு நலன்கள் பவிஷ்யா இணையதளம், ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்கள் இணையதளம், குடும்ப ஓய்வூதியம், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் போன்றவை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அமர்வுகளாக இந்தப் பயிலரங்கு நடத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120394
***
TS/SV/KPG/RR
(Release ID: 2120486)
Visitor Counter : 74