ஜல்சக்தி அமைச்சகம்
ஊட்டச்சத்து இரு வார விழாவில் மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையும் பங்கேற்கிறது
Posted On:
08 APR 2025 2:57PM by PIB Chennai
ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை, 2025 ஏப்ரல் 8 முதல் 23 வரை நடைபெற உள்ள ஊட்டச்சத்து இரு வார விழாவின் 7-வது பதிப்பில் தீவிரமாகப் பங்கேற்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சக்ஷம் அங்கன்வாடி திட்டத்துடன் இணைந்து, குடிநீர் துறை மேற்கொள்ளும் பிரச்சாரம் "ஆரோக்கியமான குழந்தைப் பருவத்திற்கான சுத்தமான குடிநீர் மற்றும் துப்புரவு" என்ற கருப்பொருளில் இருக்கும். "முழுமையான ஊட்டச்சத்தானது சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரத்துடன் தொடங்குகிறது" என்ற முழக்கத்துடன் பிரச்சாரம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு குழந்தையின் ஊட்டச்சத்து மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் சுத்தமான குடிநீர் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த ஊட்டச்சத்து இரு வார விழா 4 முக்கிய அம்சங்களுடன் கொண்டாடப்படுகிறது.
• குழந்தையின் முதல் 1000 நாட்களுக்கு முக்கியத்துவம்
• ஊட்டச்சத்து கண்காணிப்புச் செயலியில் பயனாளி தொகுதியை பிரபலப்படுத்துதல்
• தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டுக்கான சமூக மேலாண்மை பாடத்திட்டம் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை திறம்பட நிர்வகித்தல்
• குழந்தைப் பருவ உடல் பருமன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவித்தல்.
ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்களைத் தடுப்பதில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார நடைமுறைகளின் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் விரிவான சமூக அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120021
******
TS/PKV/RR/KR/DL
(Release ID: 2120170)