தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் பெண் கைதிகள், அவர்களது குழந்தைகள் உட்பட சிறைவாசிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

Posted On: 08 APR 2025 5:21PM by PIB Chennai

நாடு முழுவதும் சிறைகளில் பெண் கைதிகள், அவர்களது குழந்தைகள் உட்பட சிறைவாசிகள் எதிர்கொள்ளும் பல்வேறு இன்னல்களை இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து ஆய்வு செய்துள்ளது . சிறைச்சாலைகளில் இட நெருக்கடி,  அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள் இல்லாமை ஆகிய சிரமங்கள் இதில் அடங்கும். நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளைப் பார்வையிட்ட பின்னர் அதன் சிறப்பு கண்காணிப்பாளர்கள் மற்றும் அறிக்கை தருபவர்கள் தங்கள் அறிக்கைகள் மற்றும் புகார்கள் மூலம் இந்த பிரச்சனைகளை அதன் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

பெண் சிறைவாசிகளின் கண்ணியம் மற்றும் பாதுகாப்புக்கான உரிமைகள் மீறப்படுதல், மன உளைச்சலை ஏற்படுத்தும் வன்முறை, போதுமான கழிப்பறை, சானிட்டரி நாப்கின்கள், தூய்மையான குடிநீர் வசதிகள் இல்லாத சுகாதாரமற்ற நிலைமைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் தரமற்ற உணவு, அவர்களுடன் சிறைகளில் வாழும் பெண் கைதிகளின் குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்புகள் இல்லாமை ஆகிய குறைபாடுகளும் இதில் அடங்கும். சட்ட உதவி, தொழிற்பயிற்சி மற்றும் புனர்வாழ்வு உள்ளிட்ட அவர்களின் நலன்களுக்கான திட்டங்களை  நடைமுறைப்படுத்தாமை ஆகியவையும் குறைபாடுகளாக கூறப்படுகிறது.

எனவே, இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120090

***

SV/IR/RJ/KR/DL


(Release ID: 2120126) Visitor Counter : 22


Read this release in: English , Urdu , Hindi , Gujarati