கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கப்பல் கட்டும் திறனை அதிகரிக்க நவீன இயந்திரங்களை மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் அறிமுகப்படுத்தினார்

Posted On: 07 APR 2025 7:57PM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால், கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு வருகை தந்து, நாட்டின் கப்பல் கட்டும் திறனை மேம்படுத்துவதற்கான மேம்பட்ட இயந்திரங்களை அறிமுகப்படுத்தினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'தற்சார்பு இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதை நோக்கிய இயக்கம் இது என்று திரு சோனோவால் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு சோனோவால், "தொழில்துறை 4.0க்கான தயார் வசதிகளின் தொடக்கம் மற்றும் பசுமை இழுவை மாற்றத் திட்டம், இந்தியாவின் கப்பல் கட்டுமானம் மற்றும் பசுமை கடல்சார் பயணத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் எழுச்சியைக் குறிக்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா பார்வையின் கீழ், இந்த முயற்சிகள் கடல்சார் துறையில் புதுமை, நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றிற்கான நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்துகின்றன. கலப்பின மற்றும் மின்சார உந்துவிசை இழுவைகளின் உள்நாட்டு வளர்ச்சி ஒரு தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல, உலகளாவிய பசுமை கடல்சார் இயக்கத்தை வழிநடத்துவதற்கான இந்தியாவின் வளர்ந்து வரும் திறனின் அடையாளமாகும்”, என்று கூறினார்.

அமைச்சகத்தின் முதன்மையான நிலைத்தன்மை முயற்சியான பசுமை இழுவை மாற்றத் திட்டத்தின்(ஜி.டி.டி.பி) கீழ் உருவாக்கப்படும் இரண்டு பசுமை இழுவைகளுக்கான எஃகு வெட்டும் விழாவிற்கும் மத்திய அமைச்சர் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய மத்திய அமைச்சர், "கொச்சி கப்பல் கட்டும் தளம, தற்சார்பை நோக்கிய பிரதமர் திரு நரேந்திர மோடியின் உருமாறும் பார்வையை பிரதிபலிக்கிறது. அவரது தலைமையின் கீழ், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, தேசிய விரிவாக்கம் மற்றும் நாளைய திறமையான கடல்சார் பணியாளர்களை வடிவமைக்கும் நிறுவனங்கள் மூலம் இந்தியாவின் கடல்சார் துறை புதிய உயரங்களை எட்டுகிறது”, என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2119871

 

***

RB/DL


(Release ID: 2119904) Visitor Counter : 14


Read this release in: English , Urdu , Hindi , Malayalam