நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் முத்ரா திட்டத்தின் பத்தாண்டு கால வளர்ச்சி

Posted On: 07 APR 2025 4:44PM by PIB Chennai

அறிமுகம்

பிரதமரின் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டு 2025 ஏப்ரல் 8 அன்று 10 ஆண்டுக் காலம் நிறைவடைகிறது. பிரதமரின் முன்னோடித் திட்டமான பிரதமரின் முத்ரா திட்டம், நிதியுதவி பெறாத குறு நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு நிதியுதவி அளிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். அடமானத்தின் சுமையை நீக்குவதன் மூலமும், அணுகலை எளிதாக்குவதன் மூலமும், முத்ரா திட்டமானது எளிய தொழில்முனைவோரின் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைத்தது.

இதன் மூலம் நாடு முழுவதும் தொழில் முனைவோர்களின் வாழ்க்கைத்தரம் மாறியது. தில்லியில் தையல்காரராக இருந்த கமலேஷ், தனது தொழிலை விரிவுபடுத்திமூன்று பெண்களை வேலைக்கு அமர்த்தி, தனது குழந்தைகளை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்தார். ஒரு நாளைக்கு 50 துடைப்பங்களுடன் தொடங்கிய பிந்து, இப்போது 500 துடைப்பங்கள் உற்பத்தி செய்யும் ஒரு யூனிட்டை வழிநடத்துகிறார். இவை இனி விதிவிலக்குகள் அல்ல. இவை ஒரு பெரிய மாற்றத்தை பிரதிபலிக்கின்றன.

தையல் தொழிற்சாலைகள் மற்றும் தேநீர் கடைகள் முதல் சிகை அலங்காரக் கடைகள், வாகனம் பழுதுபார்க்கும் கடைகள் மற்றும் கைபேசி பழுதுபார்க்கும் வணிகங்கள் வரை, கோடிக்கணக்கான குறு தொழில்முனைவோர் நம்பிக்கையுடன் முன்வந்துள்ளனர். இது அவர்களின் திறனை நம்பிய ஒரு அமைப்பால் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் பெரு நிறுவனங்கள் அல்லாத, வேளாண் அல்லாத குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு நிறுவனக் கடன் வழங்குவதன் மூலம் பிரதமரின் முத்ரா திட்டம் இந்த வளர்ச்சி பயணங்களுக்கு ஆதரவளித்துள்ளது.

 

பிரதமரின் முத்ரா திட்டத்தின் சாதனைகள்

2015 ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டதிலிருந்து, பிரதமரின் முத்ரா திட்டம் ரூ.32.61 லட்சம் கோடி மதிப்புள்ள 52 கோடிக்கும் அதிகமான கடன்களுக்கு  ஒப்புதல் அளித்துள்ளது, இது நாடு தழுவிய தொழில்முனைவோர் புரட்சியை ஏற்படுத்துகிறது. வணிக வளர்ச்சி என்பது பெரிய நகரங்களுடன்  மட்டுமே என்று குறுக்கப்படாமல் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் பரவி வருகிறது. மக்கள் வேலை தேடுபவர்களாக அல்லாமல் அவர்கள் வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாறி வருகிறார்கள்.

குறு சிறு நடுத்தர கடன் அதிகரிப்பு:

ஒரு வலுவான வணிகச் சூழல் அமைப்பு

முத்ராவின் தாக்கத்தால் உந்தப்பட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் அதிகரிப்பை எஸ்பிஐ அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் 2014-ம் நிதியாண்டில் ரூ.8.51 லட்சம் கோடியிலிருந்து 2024-ம் நிதியாண்டில் ரூ.27.25 லட்சம் கோடியாக உயர்ந்தது, மேலும் 2025-ம் நிதியாண்டில் இது ரூ.30 லட்சம் கோடியைத் கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த வங்கிக் கடனில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடனின் பங்கு 2014-ம் நிதியாண்டில் 15.8 சதவீதத்திலிருந்து 2024-ம் நிதியாண்டில் சுமார் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் அதன் வளர்ந்து வரும் பங்கைக் காட்டுகிறது. இந்த விரிவாக்கம் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வணிகங்களுக்கு முன்பு கிடைக்காத நிதி ஆதரவை அணுக உதவியது. இது இந்தியாவின் தற்சார்பு பொருளாதாரத்தை வலுப்படுத்தியது மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது.

நிதி உள்ளடக்கம்: மகளிருக்கு அதிகாரம் அளித்தல்

அனைத்து முத்ரா பயனாளிகளில் 68 சதவீதம்  பேர் மகளிராக உள்ளனர். இது நாடு முழுவதும் மகளிர் தலைமையிலான நிறுவனங்களை முன்னேற்றுவதில் திட்டத்தின் முக்கியப் பங்கை சுட்டிக் காட்டுகிறது.  2016 மற்றும் 2025-ம் நிதியாண்டுக்கு இடையில், ஒரு பெண்ணுக்கு பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட தொகை 13 சதவீதம் அதிகரித்துரூ.62,679 ஐ எட்டியது. அதே நேரத்தில் ஒரு பெண்ணுக்கு அதிகரிக்கப்பட்ட வைப்புத்தொகை 14 சதவீதம் அதிகரித்து ரூ.95,269 ஆக இருந்தது. மகளிருக்கு அதிக பங்களிப்பு வழங்கும் மாநிலங்கள், மகளிர் தலைமையிலான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூலம் குறிப்பிடத்தக்க அளவு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இது மகளிரின் பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் தொழிலாளர் பங்களிப்பை மேம்படுத்துவதில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதி உள்ளடக்கத்தின் செயல்திறனை வலுப்படுத்துகிறது.

நிதி உள்ளடக்கம்: எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்திற்கு கடன்

பாரம்பரிய கடன் தடைகளை உடைப்பதில் பிரதமரின் முத்ரா திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. எஸ்பிஐ அறிக்கையின்படி, முத்ரா கணக்குகளில் 50 சதவீதம் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி தொழில்முனைவோர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இது முறையான நிதிக்கான பரந்த அணுகலை உறுதி செய்கிறது. மேலும், முத்ரா கடன் வசதியைப் பெற்றவர்களில் 11 சதவீதம் பேர் சிறுபான்மை சமூகங்களைச்  சேர்ந்தவர்கள் ஆவர். இது விளிம்புநிலை சமூகங்கள் முறையான பொருளாதாரத்தில் தீவிர பங்கேற்பாளர்களாக மாற உதவுவதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு திட்டத்தின் பங்களிப்பை நிரூபிக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில், முத்ரா 52 கோடிக்கும் அதிகமான கடன் கணக்குகளைத்  தொடங்க வசதி செய்துள்ளது. இது தொழில்முனைவோர் நடவடிக்கைகளில் நிலையான உயர்வைக் குறிக்கிறது.  கிஷோர் கடன்களின் பங்கு (ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை) 2016-ம் நிதியாண்டில் 5.9 சதவீதத்திலிருந்து 2025-ம் நிதியாண்டில் 44.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது குறு நிறுவனங்களில் இருந்து சிறு நிறுவனங்களுக்கு மாற்றத்தைக் குறிக்கிறது. தருண் பிரிவும் (ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை) அதிகரிகத்துள்ளது. முத்ரா என்பது வணிகங்களைத் தொடங்குவது மட்டுமல்ல, அவற்றை அளவிடவுமா உதவுகிறது என்பதை நிரூபிக்கிறது.

2025 பிப்ரவரி 28, நிலவரப்படி, 2015-ம் ஆண்டில் பிரதமரின் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, மாநிலங்களில் தமிழ்நாடு அதிக அளவாக ரூ.3,23,647.76 கோடியைப் பதிவு செய்துள்ளது. உத்தரபிரதேசம் ரூ.3,14,360.86 கோடியுடன் அடுத்த இடத்திலும், கர்நாடகா ரூ.3,02,146.41 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. மேற்கு வங்கம் மற்றும் பீகார் முறையே ரூ.2,82,322.94 கோடி மற்றும்  ரூ .2,81,943.31 கோடி குறிப்பிடத்தக்க அளவில் கடன் வழங்கியுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2119781

 

***

TS/IR/RR/KR/DL


(Release ID: 2119844) Visitor Counter : 16


Read this release in: English , Urdu , Hindi , Gujarati