புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
புள்ளியியல் அமைப்பை வலுப்படுத்த டிஜிட்டல் மின்னணு புத்தாக்கங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது
प्रविष्टि तिथि:
07 APR 2025 9:13AM by PIB Chennai
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சமீபத்தில் நடைபெற்ற மாநில அரசுகளின் அமைச்சர்கள் மாநாட்டில் புதுப்பிக்கப்பட்ட மைக்ரோடேட்டா இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இது தரவு அணுகல், பயனர் அனுபவம் மற்றும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவர அமைப்பில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்ற நிலையைக் குறிக்கிறது. தேசிய ஆய்வுகள் மற்றும் பொருளாதார கணக்கெடுப்புகளிலிருந்து சேகரிக்கப்பட்ட விரிவான புள்ளிவிவர தரவுகளுக்கான மையப்படுத்தப்பட்ட களஞ்சியமாக செயல்படும் புதிய இணையதளம், முந்தைய இணையதளம் எதிர்கொண்ட தொழில்நுட்ப வரம்புகளைக் கடந்து செயல்படுகிறது. உலக வங்கி தொழில்நுட்பக் குழுவுடன் இணைந்து, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது ஒரு நவீன, அளவிடக்கூடிய தொழில்நுட்ப அம்சத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இது சமீபத்திய பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணக்கமாகச் செயல்படுவதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், பதிலளிக்கக்கூடிய வடிவமைப்பு மற்றும் தரவு அணுகல் பொறிமுறையையும் ஆதரிக்கிறது. இதனை https://microdata.gov.in/ - இணையதளத்தில் அணுகலாம்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய புள்ளியியல் அமைப்பு பயிற்சி கழகத்தின் இணைய தளமும் தொடங்கி வைக்கப்பட்டது. அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டு முயற்சிகள் தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் எளிதாக இது கிடைக்கச் செய்கிறது. இந்த இணையதளத்தை www.nssta.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் அணுகலாம்.
***
(Release ID: 2119641)
TS/IR/RR/KR
(रिलीज़ आईडी: 2119689)
आगंतुक पटल : 45