சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தை செயல்படுத்தும் 35-வது மாநிலம் / யூனியன் பிரதேசமானது தில்லி
50 கோடி மக்களை உள்ளடக்கிய முதல் திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டம் - மத்திய அமைச்சர் திரு ஜே.பி. நட்டா
Posted On:
05 APR 2025 5:51PM by PIB Chennai
ஒரு வரலாற்று நிகழ்வாக, மத்திய சுகாதாரம் - குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் தேசிய சுகாதார ஆணையம், தில்லி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ள நிலையில், ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தை செயல்படுத்தும் 35 வது மாநிலம்/யூனியன் பிரதேசமாக தில்லி ஆனது.
இந்த ஒப்பந்தம், சுகாதாரம் - குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும், தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அலுவலருமான திருமதி எல்.எஸ். சங்சன் தில்லியின் சுகாதாரம் - குடும்ப நலத்துறை செயலாளர் எஸ்.பி. தீபக் குமார் ஆகியோருக்கு இடையே இன்று (05.04.2025) புதுதில்லியில் கையெழுத்தானது.
கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரம் - குடும்ப நலத் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தலைமை வகித்தார். தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, மத்திய இணையபைச்சர்கள் திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா, திருமதி அனுப்ரியா படேல், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவத்சவா, தில்லி தலைமைச் செயலாளர் திரு தர்மேந்திரா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஜே.பி. நட்டா, நாட்டில் 34 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் நடைமுறையில் உள்ள உலகின் மிகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் தற்போது தேசிய தலைநகரிலும் செயல்படுத்தப்படுவது பெருமைக்குரிய தருணம் என்று கூறினார். இது காப்பீட்டுத் திட்டம் அல்ல என்றும் உத்தரவாத' திட்டம் என்றும் அவர் கூறினார்.
50 கோடி மக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ன முதல் திட்டம் இதுதான் என்றும் திரு நட்டா குறிப்பிட்டார்.
2014-ம் ஆண்டில் 62% ஆக இருந்த மருத்துவத்திற்கான மக்களின் சொந்த செலவு தற்போது 38% ஆக குறைந்துள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இதற்கு அரசின் திட்டங்களே காரணம் என்று திரு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, தில்லி அரசு மத்திய அரசு வழங்கும் காப்பீட்டுடன் கூடுதலாக ₹5 லட்சம் காப்பீடு வழங்கும் எனவும் இந்தத் திட்டத்தின் கீழ் தில்லியில் சுமார் 6.54 லட்சம் குடும்பங்கள் பயனடையும் எனவும் தெரிவித்தார்.் இந்த திட்டத்திற்கான அட்டை விநியோகம் 10 ஏப்ரல் 2025 முதல் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
***
(Release ID: 2119281)
PLM/ RJ
(Release ID: 2119317)
Visitor Counter : 48