பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டத்தில் பயன்பெறுபவர்கள், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு - இணையதளம் மூலம் நடத்தியது கார்ப்பரேட் விவகார அமைச்சகம்

Posted On: 05 APR 2025 4:11PM by PIB Chennai

2025 ஏப்ரல் 3 அன்று கார்ப்பரேட் விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்த இணையதள நிகழ்வில், பிரதமரின் உள்ளகப் பயிற்சித் (இன்டர்ன்ஷிப்) திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பயிற்சியாளர்கள் தங்கள் தற்போதைய பயிற்சியின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் முந்தைய பதிப்பில் (மார்ச் 27, 2024), மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஓஎன்ஜிசி இந்தியா நிறுவனத்தின் திறன் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் அனில் பகுகுணா, ஓஎன்ஜிசி-யில் உள்ள உள்ளகப் பயிற்சி இளைஞர்களின் முக்கிய திறன்கள், ஒட்டுமொத்த ஆளுமை மேம்பாட்டிற்கு இப்பயிற்சி எவ்வாறு உதவுகிறது என்பதை விரிவாக விளக்கினார்.

ஜோர்ஹாட்டைச் சேர்ந்த ஓஎன்ஜிசி பயிற்சியாளர்களான வில்கிலிண்டன் தியோரி, அதிதி காஷ்யப் ஆகியோர் பல அம்சங்களை உள்ளடக்கிய தங்கள் இன்டர்ன்ஷிப் பயணம் குறித்து பேசினர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்காலைச் சேர்ந்த பயிற்சியாளர் ஜெயா ஐஸ்வர்யா  இன்டர்ன்ஷிப் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசினார்.

தில்லியைச் சேர்ந்த மற்றொரு பயிற்சியாளரான அவி ராணா, ஓஎன்ஜிசி-யின் மூத்த மேலாளர்களால் மனித வளம், நிதி போன்ற பல்வேறு தலைப்புகளில் பல வகுப்பறை பயிற்சிகள் நடத்தப்பட்டன என்று பகிர்ந்து கொண்டார்.

இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் தொழில்முறை சூழல்களுக்கு ஏற்ற பயிற்சியை வழங்குவதில் பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் தாக்கத்தையும் தங்களது அனுபவங்களையும் அனைத்து பயிற்சியாளர்களும் பகிர்ந்து கொண்டனர்.

பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் முதன்மைக் கட்டத்தின் சுற்று 2- க்கான விண்ணப்ப கட்டம் தற்போது நடந்து வருகிறது.2025 ஏப்ரல் 15 விண்ணப்பிக்க கடைசி தேதியாகும்.

மேலும் தகவலுக்கு https://pminternship.mca.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

***

(Release ID: 2119249)

PLM/RJ


(Release ID: 2119264) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi , Gujarati