ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய பாம்பன் பாலத்தின் எழுச்சி - இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குக் கடல் பாலம், நவீன உள்கட்டமைப்பில் ஒரு புதிய சாதனையை உருவாக்குகிறது

Posted On: 04 APR 2025 5:21PM by PIB Chennai

ராம நவமியை முன்னிட்டு ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைக்கிறார்.

புதிய பாம்பன் பாலம் இந்தியாவின் பொறியியல் வலிமை, தொலைநோக்கு உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்ளுக்கு ஒரு சான்றாக நிற்கிறது. வரலாற்றில் வேரூன்றிய அதன் கதை 1914-ம் ஆண்டில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் அசல் பாம்பன் பாலத்தை கட்டியபோது தொடங்குகிறது. இது ஒரு கான்டிலீவர் (ஒரு பாலத்தின் முடிவை ஆதரிக்க ஒரு சுவரில் இருந்து நீண்டிருக்கும் ஒரு நீண்ட உலோகம் அல்லது மரத்துண்டு) கட்டமைப்புடன் ஷெர்சர் ரோலிங் லிப்ட் ஸ்பான் கொண்டு ராமேஸ்வரம் தீவை இந்தியாவின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கிறது.

 

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, இது யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், வர்த்தகத்திற்கு ஒரு முக்கியமான உயிர்நாடியாக செயல்பட்டது. இருப்பினும், கடுமையான கடல் சூழல், வளர்ந்து வரும் போக்குவரத்து ஆகுயவை புதிய நவீன தீர்வை அவசியமாக்கின. 2019-ம் ஆண்டில், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, எதிர்காலத்திற்கு தயாரான மாற்றுக் கட்டுமானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதன் விளைவாக இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் கடல் பாலம், 2.07 கிலோமீட்டர் நீள அதிசயமாக உருவாக்கப்பட்டது. பாரம்பரியத்தை புதுமையுடன் கலக்கும் புதிய பாம்பன் பாலம் இப்பகுதியின் கலாச்சார, வரலாற்று முக்கியத்துவத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வடிவமைப்பு, போக்குவரத்து இணைப்பு, பிராந்திய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

 

புதிய பாம்பன் பாலம் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) மூலம் கட்டப்பட்டது.

புதிய பாம்பன் பாலத்தின் முக்கிய அம்சங்கள்:

*72.5 மீட்டர் வழிசெலுத்தல் இடைவெளியை 17 மீட்டர் வரை உயர்த்த முடியும். இது பெரிய கப்பல்கள் அடியில் செல்ல அனுமதிக்கிறது.

*புதிய பாலம் தற்போதுள்ள பாலத்தை விட 3 மீட்டர் உயரமானது. கடல் இணைப்பை மேம்படுத்துகிறது.

*துணை கட்டமைப்பு இரண்டு தடங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

*நவீன பொருட்கள், பொறியியல் நுட்பங்களைப் பயன்படுத்துவது பாலத்தின் நீண்ட ஆயுளை உறுதி செய்யும்.

*இந்த பாலம் துருப்பிடிக்காத எஃகு வலுவூட்டல், உயர்தர பாதுகாப்பு வண்ணப்பூச்சு, முழுமையாக பற்றவைக்கப்பட்ட இணைப்புகளுடன் கட்டப்பட்டுள்ளது.

*சிறப்பு பாலிசிலோக்சேன் பூச்சு அரிப்பிலிருந்து பாதுகாக்கிறது. கடுமையான கடல் சூழலில் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது.

புதிய பாம்பன் பாலத்தின் தேவை:

21-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமைக்கப்பட்ட பழைய பாலத்தால் நவீன போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அதிகரித்து வரும் போக்குவரத்து, வேகமான, பாதுகாப்பான இணைப்பின் தேவையுடன் இணைந்து, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, நீடித்த, எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் ஒரு புதிய கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளது.

புதிய பாம்பன் பாலம் பின்வருவனவற்றை உறுதி செய்யும்:

மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து: கனரக ரயில் போக்குவரத்து, வேகமான ரயில்களுக்கு இடமளித்தல்.

கடல்சார் ஒருங்கிணைப்பு: பெரிய கப்பல்களை இடையூறுகள் இல்லாமல் கடந்து செல்ல அனுமதித்தல்.

ஆயுள்: குறைந்தபட்ச பராமரிப்புடன் 100 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலத்தை உறுதி செய்தல்.

புதிய பாம்பன் பாலம், பாரம்பரியத்துடன் புதுமையை கலக்கும் இந்தியாவின் திறனின் அடையாளமாகும். சுற்றுச்சூழல், தொழில்நுட்ப சவால்களை சமாளித்து, இந்த அதிநவீன செங்குத்து தூக்கு ரயில் பாலம் நாட்டின் வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு திறன்களுக்கு பெருமைமிக்க சான்றாக நிற்கிறதுநவீன வடிவமைப்பு, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், பாலம் ஒரு முக்கியமான போக்குவரத்து இணைப்புக்கு புத்துயிர் அளிப்பது மட்டுமல்லாமல், பிராந்திய இணைப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் பலப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118895

***

PLM/RJ


(Release ID: 2119255) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi , Gujarati