ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் 3-ம் கட்டத்தின் கீழ் மணிப்பூர், மிசோரம், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பு ஊக்கத்தை அளிக்க மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் முடிவு

Posted On: 05 APR 2025 11:26AM by PIB Chennai

கிராமப்புறப் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மணிப்பூர், மிசோரம், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களுக்கு பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் 3-ம் கட்டத்தின் கீழ், குறிப்பிட்ட திட்டங்களுக்கு ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மணிப்பூர்: 225.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 280.97 கிலோ மீட்டர் நீளமுள்ள 41 சாலைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் 3-வது கட்டத்தின் கீழ், 404.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 502.24 கிலோமீட்டர் நீளமுள்ள 56 சாலைகளுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மிசோரம்: 67.69 கோடி மதிப்பீட்டில்  07 பாலங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  487.50 கிலோமீட்டர் நீளமுள்ள 17 சாலைப் பணிகளுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசம்: 140.90 கோடி மதிப்பீட்டில் 21 பாலங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 3,345.82 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட்: 40.77 கோடி முதலீட்டில் 09 பாலங்கள் அமைக்க மாநிலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1,865.34 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சியின் நோக்கங்கள்:

 

- சுகாதாரம், கல்வி, சந்தைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல்.

- தொலைதூர கிராமங்களுக்கும் நகர்ப்புற மையங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, கிராமப்புறங்களில் இணைப்பை மேம்படுத்துதல்.

- பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகத்தை வளர்த்தல்.

- வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், உள்ளூர் பொருளாதாரங்களை ஊக்குவித்தல்.

***

(Release ID: 2119161)

 PLM / RJ


(Release ID: 2119195) Visitor Counter : 25