பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
ஸ்டார்ட்அப் மஹாகும்பமேளா- 2025-ல் எரிசக்தி புதுமைக் கண்டுபிடிப்புகளை பெட்ரோலிய அமைச்சகம் ஊக்குவிக்கிறது
प्रविष्टि तिथि:
05 APR 2025 9:54AM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2025 ஏப்ரல் 03 முதல் 05 வரை நடைபெறும் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா - 2025 நிகழ்ச்சியில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் தீவிரமாகப் பங்கேற்றுள்ளது.
எண்ணெய், எரிவாயு பொதுத்துறை நிறுவனங்கள் புதுமையான புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவவும், வழிகாட்டவும், நிதியளிக்கவும் வலுவான கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளன. ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா 2025-ல் மொத்தம் 32 பொதுத்துறை நிறுவன ஆதரவு புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்கிற்றுள்ளன. ஓஎன்ஜிசி-யின் புத்தொழில் நிதி ஐந்து ஆண்டுகளில் 450% வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஸ்டார்ட்அப் இந்தியா கொள்கையின் கீழ் அதன் முதல் எண்ணெய் வயல் புத்தொழில் நிறுவனமான வெல்ஆர்எக்ஸ் அதன் எரிசக்தி தீர்வுகளை 120 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவுபடுத்துகிறது. இந்தியன் ஆயில் தனது இன்ட்ஸ்-அப் முயற்சியின் கீழ் 42 புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியளித்து, 86 அறிவுசார் சொத்துக்களையும் 635 வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
முன்னணி பொதுத்துறை எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களைச் சேர்ந்த 14 மூத்த நிர்வாகிகள் தங்கள் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டனர். ஓஎன்ஜிசி் நிறுவனத்தின் தலைவர் தொடக்க அமர்வில் பங்கேற்றார்.
***
(Release ID: 2119137)
PLM /RJ
(रिलीज़ आईडी: 2119194)
आगंतुक पटल : 57