நிதி அமைச்சகம்
ஓய்வூதியம் குறித்த முதலாவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு 2025 உலக வங்கி மற்றும் நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்புடன் நிறைவடைந்தது
Posted On:
05 APR 2025 11:17AM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற ஓய்வூதியம் குறித்த முதலாவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு 2025 நேற்று நிறைவடைந்தது. இது ஏப்ரல் 3 அன்று பாரத மண்டபத்தில் இந்திய அரசின் நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரியால் தொடங்கி வைக்கப்பட்டது. வலுவான முதியோர் வருமான பாதுகாப்பை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து இந்த இரண்டு நாள் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்தத் தளம் கொள்கை வகுப்பாளர்கள், அறிஞர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்களை ஒன்றிணைத்து ஓய்வூதிய சீர்திருத்தங்களின் வளர்ந்து வரும் இயக்கவியல், ஓய்வூதியத்திற்கான நிதி தயார்நிலை மற்றும் மூத்த குடிமக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான புதுமையான உத்திகள் குறித்து விவாதித்தது.
இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கு கண்ணியமான எதிர்காலத்தைப் பாதுகாக்க அவசரமான, உள்ளடக்கிய ஓய்வூதிய சீர்திருத்தங்கள் தேவை என்று நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி கூறினார். 2050-ம் ஆண்டுக்குள், ஐந்து இந்தியர்களில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பார். 2047-ல் , வயதானவர்களின் எண்ணிக்கை குழந்தைகளை விட அதிகமாக இருக்கும். இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் மக்கள்தொகையில் 19 சதவீதத்தினர் முதியவர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கியமாக பெண்கள், அனைவரையும் உள்ளடக்கிய ஓய்வூதியத் திட்டங்கள் மூலமாக நிதி சுதந்திரத்தைப் பாதுகாப்பது வெறுமனே ஒரு இலக்கு மட்டுமல்ல, மாறாக நாட்டிற்கு ஒரு இன்றியமையாத தேவையாகும். "அனைவருக்கும் ஓய்வூதியம்" என்பது ஒரு தேசிய முன்னுரிமையாக மாற வேண்டும், நமது வயதான மக்களுக்கு கண்ணியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான கொள்கை நடவடிக்கைகள் தேவை என்று அவர் கூறினார்.
நிதிச் சேவைகள் துறை செயலாளர் திரு நாகராஜு மடிராலா, இந்தியாவின் ஓய்வூதிய கட்டமைப்பு மாற்றத்தின் ஒரு முக்கிய தருணத்தில் நிற்கிறது என்றும், ஒருங்கிணைந்த ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் அதனை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மூலம், பாதுகாப்பான ஓய்வுக்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்குவதாக கூறினார்.
பாரத மண்டபத்தில் நடைபெற்ற ஓய்வூதியம் குறித்த முதல் சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டின் தொடக்க நாள் ஒரு மகத்தான வெற்றியாக இருந்தது, இதில் மூன்று ஆற்றல்மிக்க குழு விவாதங்கள் இடம்பெற்றன, அவை பங்கேற்பாளர்களை அவற்றின் ஆழம் மற்றும் பன்முகத்தன்மையால் கவர்ந்தன.
ஏப்ரல் 4, 2025 அன்று திட்டமிடப்பட்ட இரண்டாவது நாள், ஓய்வூதிய முறைகள் குறித்த புதுமையான ஆய்வுகளை வெளிப்படுத்தும் தொடர்ச்சியான ஆராய்ச்சிக் கட்டுரை விளக்கக்காட்சிகளுடன் உயர்ந்த சொற்பொழிவைக் கண்டது. நிறைவு நாளில் இரண்டு கூடுதல் குழு விவாதங்கள் இடம்பெற்றன.
குழு விவாதத்தைத் தொடர்ந்து விருது வழங்கும் விழா நடைபெற்றது. மதிப்புமிக்க பேச்சாளர்கள், குழுவினர், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் மதிப்புமிக்க நுண்ணறிவு மற்றும் பங்களிப்புகளுடன் மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2119157
***
PKV/ RJ
(Release ID: 2119193)
Visitor Counter : 27