சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தலசீமியாவைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் அரசு எடுத்த நடவடிக்கைகள்
Posted On:
04 APR 2025 3:56PM by PIB Chennai
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், மரபணு சார்ந்த குருதி நோயான தலசீமியாவைத் தடுப்பதற்கும், சிசிக்சை அளிப்பதற்கும் பொது சுகாதார மையங்களுக்கு ஆதரவளிக்கிப்படுகிறது. இரத்த வங்கி வசதிகள், பகல்நேர பராமரிப்பு, மருந்துகள், ஆய்வக சேவைகள், மனிதவள பயிற்சி உள்ளிட்ட சுகாதார அமைப்பை வலுப்படுத்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உதவி வழங்கப்படுகிறது.
2025 மார்ச் 26 நிலவரப்படி, 15,87,903 பேர்களிடம் தலசீமியா நோய் கண்டறிதல் செய்யபரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 50,462 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் கோல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் கீழ் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட 17 மருத்துவமனைகளில், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு தகுதியான நோயாளிகளுக்கு ரூ.10 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் இதனைத் தெரிவித்தார்.
------
(Release ID: 2118782)
TS/GK/KPG/DL
(Release ID: 2118998)
Visitor Counter : 22