புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
புள்ளிவிவர அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்த மாநில அமைச்சர்களின் மாநாடு புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை நடைபெறுகிறது
Posted On:
04 APR 2025 12:01PM by PIB Chennai
புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் நாளை (2025 ஏப்ரல் 5) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான்பவனில் புள்ளிவிவர அமைப்புகளை வலுப்படுத்துதல் குறித்த மாநில அமைச்சர்களின் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
பல்வேறு சமூக-பொருளாதார குறியீடுகளுக்கான தேசிய மற்றும் துணை மட்டங்களில் பொருத்தமான, துல்லியமான புள்ளிவிவரங்களை உரிய காலத்தில் உருவாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். மத்திய, மாநிலங்களுக்கு இடையேயான ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், தேசிய, மாநில அளவில் புள்ளிவிவர அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்த விவாதங்களிலும் இந்த மாநாடு கவனம் செலுத்தும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தேவைகள் குறித்த முழுமையான புரிதலைப் பெறுவதற்கும், அவற்றின் புள்ளிவிவர அமைப்புகளை மேம்படுத்துவது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் (தனிப்பொறுப்பு), மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளின் மூத்த அதிகாரிகள், உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118634
-----
TS/GK/KPG/SG
(Release ID: 2118679)