ஜல்சக்தி அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: ஜல் ஜீவன் இயக்கத்தின் நடைமுறையாக்கல்
प्रविष्टि तिथि:
03 APR 2025 4:05PM by PIB Chennai
ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசானது ஜல் ஜீவன் இயக்கம் என்ற மத்திய நிதியுதவித் திட்டத்தை ஆகஸ்ட் 2019-ல் தொடங்கியது.
இந்த இயக்கம் தொடங்கப்பட்டபோது, 3.23 கோடி (16.7%) கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் இருந்தன. தற்போது 31.03.2025 நிலவரப்படி, மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் தெரிவித்தபடி, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், இதுவரை சுமார் 12.34 கோடி கூடுதல் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 31.03.2025 நிலவரப்படி, நாட்டில் உள்ள 19.36 கோடி கிராமப்புற வீடுகளில், 15.57 கோடிக்கும் அதிகமான (80.38%) வீடுகள் குழாய் மூலம் குடி நீர் விநியோகத்தைக் கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 111.05 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு தற்போது குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது 88.64% ஆகும்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் ஜல் சக்தி இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இதனைத் தெரிவித்துள்ளார்.
----
(Release ID: 2118247)
TS/PLM/KPG/DL
(रिलीज़ आईडी: 2118406)
आगंतुक पटल : 29