சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
18 வட்டார மொழிகளில் தீர்ப்புகளை மொழிபெயர்ப்பதில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்களுடன் இணைந்து செயல்படுகிறது
प्रविष्टि तिथि:
03 APR 2025 4:03PM by PIB Chennai
18 வட்டார மொழிகளில் மின்னணு முறையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை (e-SCR) மொழிபெயர்க்க உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்களுடன் இணைந்து செயல்படுகிறது. செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்ப்பதைக் கண்காணிக்க, நீதிபதி ஒருவரது தலைமையில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் சட்ட மொழிபெயர்ப்பு ஆலோசனைக் குழுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்துள்ளார். அனைத்து உயர் நீதிமன்றங்களிலும், இதேபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் செயற்கை நுண்ணறிவுக் குழு, உயர் நீதிமன்றங்களின் செயற்கை நுண்ணறிவுக் குழுக்களுடன் அடிக்கடி கூட்டங்களை நடத்தி, செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்புகளை உள்ளூர் மொழியில் மொழிபெயர்ப்பதற்கான வழிமுறைகள்/பரிந்துரைகளை வழங்கி வருகிறது.
28.03.2025 நிலவரப்படி, 36344 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இந்தி மொழியிலும், 47439 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிற வட்டார மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, இ-எஸ்சிஆர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. தமிழில் 2808 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மொழிப் பெயர்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், சட்டம் மற்றும் நீதி இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118241
----
TS/PLM/KPG/DL
(रिलीज़ आईडी: 2118357)
आगंतुक पटल : 36